மனைவி ஜீவிதாவுடன் பாஜகவில் சேர்ந்த நடிகர் ராஜசேகர்
ஹைதராபாத்: நடிகர் ராஜசேகர், தனது மனைவி ஜீவிதாவுடன் பாஜகவில் சேர்ந்தார்.
இது தான்டா போலீஸ் பட புகழ் ராஜசேகர் தனது மனைவியும் முன்னாள் நடிகையுமான ஜீவிதா மற்றும் 2 மகள்களுடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். அவர்கள் இருவரும் பாஜகவில் சேரப் போவதாக ஆந்திராவில் பேச்சாகக் கிடந்தது.

இந்நிலையில் ராஜசேகரும், ஜீவிதாவும் ராஜ்நாத் சிங் முன்னிலையில் நேற்று பாஜகவில் சேர்ந்தனர். முன்னதாக அவர்கள் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். ஆனால் சேர்ந்த வேகத்தில் கட்சியை விட்டு வெளியே வந்துவிட்டனர். முன்னதாக அவர்கள் காங்கிரஸில் சேர திட்டமிட்டதாக வேறு கூறப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக பிரபலங்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறது. முன்னதாக தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜு பாஜகவில் சேர்ந்தார். தற்போது ராஜசேகரும், ஜீவிதாவும் சேர்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications