"ரீல்ஸ் மோகம்".. பால் கேனால் இளைஞருக்கு நேர்ந்த கதி.. இனி வாழ்க்கையில் மறக்கவே மாட்டார்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கொளுத்தி எடுக்கும் வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக பால் கேனை தலையில் கவிழ்த்து ரீல்ஸ் எடுக்க முயன்ற இளைஞர் வம்பில் சிக்கி கொண்டார். அவரது தலையில் பால்கேன் மாட்டி கொண்டதால் அவர் திணறிப்போனார். என்ன நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தற்போது பலரின் வாழ்க்கையில் சமூக வலைதளம், ரீல்ஸ் உள்ளிட்டவை ஒன்றாகிவிட்டது. எங்கே சென்றாலும் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி வாடிக்கையாக மாற்றி உள்ளனர்.

இந்நிலையில் தான் ராஜஸ்தானில் ரீல்ஸ் எடுக்கும் ஆர்வத்தில் இளைஞர் செய்த சம்பவம் அவரை சிக்கலில் சிக்க வைத்துள்ளது. ஆம், பால் கேனை தலையில் கவிழ்த்து ரீல்ஸ் எடுக்க முயன்ற இளைஞருக்கு நேர்ந்த கதியை இங்கு பார்க்கலாம்.
கோதுமை வியாபாரம்
ராஜஸ்தான் மாநிலம், ஆழ்வார் மாவட்டம் மதோகார் கிராமத்தை சேர்ந்தவர் காலுராம். இவர் தனது நண்பருடன் சேர்ந்து கோதுமை வியாபாரம் செய்ய சென்றார். காலுராமின் நண்பர் டூவீலர் ஓட்டினார். காலுராம் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தார். கையில் அவர் பால்கேன் ஒன்றை வைத்திருந்தார். அப்போது கடுமையாக வெயில் இருந்தது.
பால் கேனை தலையில்..
இதனால் காலுராம் தனது கையில் இருந்த பால் கேனை தூக்கி தலையில் கவிழ்த்து வைத்தார். கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்கும் வகையில் அவர் இந்த செயலை செய்தார். அதோடு அதனை ரீல்ஸாக செல்போனில் வீடியோ எடுத்தார். இந்த சமயத்தில் தலையில் கவிழ்த்து வைக்கப்பட்ட பால் கேன் மெதுமெதுவாக கீழே இறங்கி அவரது தலையில் 'டைட்டாக' சிக்கி கொண்டது.
தலையில் சிக்கிய பால்கேன்
இதனால் பால்கேனை அவரால் தலையில் இருந்து எடுக்க முடியவில்லை. உடனடியாக குடும்பத்தினர் பலரும் பால்கேனை எடுக்க முயன்றனர். அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து வேறு வழியின்றி அவரை ஹார்ட்வேர் கடைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு காலுராமின் தலையில் சிக்கிய பால் கேன் வெட்டி எடுக்கப்பட்டது. தலையில் சிக்கியபடி பால் கேனுடன் காலுராம் டூவீலரில் வலம் வந்தது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications