Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தல் 2023: பாஜக மலை போல் நம்பும் அரச குடும்ப பெண்! யார் இந்த வசுந்தரா ராஜே?

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக வியூகம் வகுத்து வரும் நிலையில் அக்கட்சி மலை போல் நம்பி இருக்கும் பெண் வசுந்தரா ராஜே!

ராஜஸ்தானில் தற்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த சட்டசபையின் பதவிகாலம் முடிவடையவுள்ளதால் வரும் 25 ஆம் தேதி சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Rajasthan assembly election 2023: BJP rely on Vasundhara Raje

இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி ஆகும். இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இதற்காக 156 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அது போல் பாஜக மட்டும் என்ன சும்மாவா! அவர்களும் 184 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் 100 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. 72 இடங்களில் பாஜக வென்று எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் ஆவார். கடந்த 2013 ஆம் ஆண்டு வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக 163 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது.

இந்த முறையும் வசுந்தரா ராஜேவையே பாஜக நம்பியுள்ளது. ராஜஸ்தானை பொருத்தவரை வசுந்தரா ராஜேதான் அனைவரும் அறிந்த தலைவராக உள்ளார். எனவே அவரை முதல்வர் வேட்பாளராக்கி தேர்தலில் வெல்ல பாஜக வியூகம் வகுத்து வருகிறது. அதற்கு முன்பு யார் இந்த பெண் என்பதை பார்ப்போம்.

வசுந்தரா ராஜே சிந்தியா அரச குடும்பத்தை சேர்ந்தவர். இவரது குடும்பம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியரை ஆட்சி செய்தவர்கள். அவருடைய தாய் விஜயராஜே சிந்தியா பாரதீய ஜன சங்கத்தில் முக்கிய தலைவராக இருந்தார். அதன் பின்னர் பாஜகவில் இணைந்தார். வசுந்தராவின் சகோதரர் மாதவ ராவ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

வசுந்தரா 1984 ஆம் ஆண்டு தனது அரசியல் பயணத்தை பாஜகவில் தொடர்ந்தார். அவர் மெதுவாக முன்னேறி 1985 ஆம் ஆண்டு ராஜஸ்தான் பாஜக இளைஞரணி துணைத் தலைவர் பதவியை பெற்றார். இரு ஆண்டுகள் கழித்து ராஜஸ்தான் மாநில பாஜக துணைத் தலைவராக இருந்தார். 2003 ஆம் ஆண்டு வரை அவர் பல்வேறு முறை லோக்சபா தேர்தல்களில் வென்றுள்ளார்.

இதையடுத்து 2003 ஆம் ஆண்டு அவர் ராஜஸ்தான் மாநில அரசியலுக்கு திரும்பினார். ராஜஸ்தானின் முதல் பெண் முதல்வர் என்ற சாதனையை படைத்தார். வசுந்தரா, ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் அரசு குடும்பத்தின் தலைவர் ஹேமந்த் சிங்கை 1972 ஆம் ஆண்டு மணந்தார். அவர்களுக்கு துஷ்யந்த் சிங் என்ற மகன் உள்ளார். அவர் வசுந்தரா முன்பு போட்டியிட்ட ஜலாவார் தொகுதியின் எம்பியாக உள்ளார் துஷ்யந்த். மும்பையில் சோபியா பெண்கள் கல்லூரியில் வசுந்தரா பொருளாரத்திலும் அரசியல் அறிவியலிலும் பட்டம் பெற்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+