தேரை இழுத்து தெருவில் விட்ட பாஜக.. ராஜஸ்தான் தேர்தலில் போட்டியிட்ட 4 எம்பிக்கள் பின்னடைவு
ஜெய்பூர்: ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் பாஜக முன்னிலை வகித்து வரும் நிலையில் இதில் போட்டியிட்ட பாஜக எம்பிக்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் யார்? அவர்களின் முடிவு என்ன என்று பார்ப்போம்.
2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்த பாஜக, இந்த தேர்தலிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் களம் கண்டது. காங்கிரஸ் ஆட்சிக் காலம் இந்த ஆண்டு இறுதியுடன் நிறைவடையும் நிலையில் நவம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் காங்கிரஸும், பாஜகவும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டன. இன்று 199 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள், எம்பிக்களை வைத்து பிரச்சாரம் செய்யாமல், அவர்களையே தேர்தலில் போட்டியிட வைத்தது. மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு கொண்ட எம்பிக்கள் மற்றும் மத்திய அமைச்சர்களை போட்டியிட வைத்து இதில் வெற்றிபெறலாம் என்பது அக்கட்சியின் வியூகம். இதுவரை வெளியான முடிவுகளின்படி இந்த வியூகத்துக்கு வெற்றி கிடைத்து இருக்கிறதா என்று பின்வரும் முன்னிலை நிலவரங்களில் பார்ப்போம்.
அந்த வகையில் ராஜஸ்தான் தேர்தலில் போட்டியிட்டு முன்னிலை வகித்து வரும் பாஜக எம்பிக்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் யார்? என்று பார்ப்போம். இந்த வரிசையில் முதலில் இருப்பவர் ஜோத்வாரா தொகுதியில் போட்டியிடும் பாஜக ஜெய்பூர் ரூரல் தொகுதி எம்பி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முன்னாள் விளையாட்டு வீரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான இவர் தற்போது 22,000 வாக்குகளுக்கு மேல் முன்னிலையில் உள்ளார்.
ராஜ்சாமந்த் தொகுதி பாஜக எம்பியான டியா குமாரி, ஜெய்பூரில் உள்ள வித்யாதர் நகர் தொகுதியில் போட்டியிட்டார். இவர் தற்போது 56,000 வாக்குகளுக்கு மேல் முன்னிலையில் இருந்து வருகிறார். ஜுன்ஜுனு தொகுதி பாஜக எம்பி நரேந்திர குமார், ராஜஸ்தானின் மாண்டவா தொகுதியில் போட்டியிட்டு 12,000 வாக்குகளுக்கு பின்தங்கி உள்ளார். ராஜஸ்தானின் ஆல்வார் பாஜக எம்.பி. பாபா பாலக்நாத் திஜாரா 789 வாக்குகளுக்கு பின்தங்கி உள்ளார்.
பாஜகவின் அஜ்மீர் எம்.பி. பகிரத சௌத்ரி கிஷங்கர்க் தொகுதியில் நிறுத்தப்பட்டார். இவர், 20 ஆயிரம் வாக்குகள் பின்தங்கி உள்ளார். ஜாலோர்தொகுதி பாஜக எம்பி தேவ்ஜி படேல், சஞ்சோர் தொகுதியில் 33,000 வாக்குகள் பின்தங்கி இருக்கிறார். பாஜக வேட்பாளர் கிரோரி லால் மீனா சவாய் மாதோபூர் தொகுதியில் 14,000 வாக்குகளுக்கு மேல் முன்னிலையில் உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications