ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம்.. புதிய அமைச்சர்களாக 15 பேர் பதவியேற்பு.. சச்சின் பைலட்டுக்கு குஷி!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் இருக்கிறார். ராஜஸ்தான் காங்கிரசை பொறுத்தவரை கடந்த ஆண்டு நடந்த மோதல் இந்த நாடே அறியும். ராகுல் காந்திக்கு பிடித்தவரும், துணை முதல்வராக இருந்தவருமான சச்சின் பைலட்டுக்கும் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் இடையே மோதல் மூண்டது.
தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருடன் கெலாட் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் சச்சின் பைலட். ஆனால் பெரும்பான்மையை நிரூபித்ததால் அசோக் கெலாட் முதல்வர் பதிவியை தக்க வைத்துக் கொண்டார்.

சமாதானம் செய்த சோனியா
நிலைமை மோசமாகி போவதை உணர்ந்த சோனியா காந்தி சச்சின் பைலைட்டை அழைத்து சமாதானம் செய்தார். இந்த நிகழ்வு நடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகியும் சச்சின் பைலட்டுக்கும், அசோக் கெலாட்டுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. அசோக் கெலாட் அரசு தனது அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்தது.

அமைச்சரவை மறுசீரமைப்பு
அமைச்சரவையில் தனது ஆதரவாளர்களையும் சேர்க்க வேண்டும் என்று சச்சின் பைலட் ஏற்கனவே சோனியா காந்தியிடம் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் முதல்வர் அசோக் கெலாட் அரசு அமைச்சரவையை இன்று மறுசீரமைப்பு செய்துள்ளது. சச்சின் பைலட்-அசோக் கெலாட் சுமார் 16 மாதங்களுக்குப் பிறகு அமைச்சரவை மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. 11 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 4 இணை அமைச்சர்கள் உட்பட மொத்தம் 15 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர் .ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள்
அமைச்சர்களாக பதவியேற்ற 15 பேரில் 7 பேர் எஸ்.சி/எஸ்.டி பிரிவைச் சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட ரமேஷ் மீனா மற்றும் விஸ்வேந்திர சிங் ஆகியோர் மீண்டும் அமைச்சரவை யில் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள். பிரிஜேந்திர சிங் ஓலா மற்றும் முராரிலால் மீனா ஆகியோர் இணை அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். முன்பு மாநில அமைச்சர்களாக இருந்த மம்தா பூபேஷ் பைர்வா, பஜன்லால் ஜாதவ் மற்றும் திகாரம் ஜூலி ஆகியோர் தற்போது கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

மூன்று பெண்களுக்கு இடம்
மகேந்திர ஜீத் சிங் மாளவியா, ராம்லால் ஜாட், மகேஷ் ஜோஷி, கோவிந்த் ராம் மேக்வால் மற்றும் சகுந்தலா ராவத் ஆகியோரும் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். 2023-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து எஸ்.சி/எஸ்.டி பிரிவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மூன்று பெண்களுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications