காங்கிரஸுக்கு டென்சன்..ராஜஸ்தானில் வெடித்த உட்கட்சி பூசல்! எம்எல்ஏகளுக்கு எதிராக தொண்டர்கள் முழக்கம்
ஜெய்பூர்: அடுத்த மாதம் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரே போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்து உள்ளது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 3 ஆம் தேதி 5 மாநிலங்களுக்கும் வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சி அமைந்தது. முதலமைச்சர் பதவி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்த காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட் இதனால் ஏமாற்றமடைந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை போன்றே போர்க்கொடி தூக்கினார். ஆனால் பாஜகவில் அவர் இணைய விரும்பாததாலும், காங்கிரஸ் தேசிய தலைமை தலையீடு காரணமாகவும் ஆட்சி கவிழவில்லை.
இருப்பினும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு ஓயவில்லை. இந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சி. அரசியல் கட்சிகள் இதற்கு முன்கூட்டியே தயாராகி தேர்தல் பணிகளில் ஈடுபட தொடங்கி உள்ளார்கள். ஆட்சியை தக்க வைக்கும் முனைப்புடன் காங்கிரஸ் கட்சி தேர்தல் பொறுப்பாளார்களை நியமித்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் 5 ஆண்டுகளாக ஆளும் காங்கிரஸில் நிலவிய உட்கட்சி பூசல்கள் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு ராஜஸ்தான் மக்களிடம் அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான்தான் தற்போது ராஜஸ்தான் காங்கிரஸுக்கு புதிய தலைவலியாக அமைந்து உள்ள அக்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு எதிரான போராட்டம். சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சில எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் சீட் தரக்கூடாது என அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வரும் நிலையில் பல தொகுதிகளில் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு வெளியே அமர்ந்து அக்கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வரும் ஜெய்பூரில் உள்ள காங்கிரஸ் வார் ரூம் வெளியிலும் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அப்போது அந்த அலுவலகத்திற்கு உள்ளே முதலமைச்சர் அசோக் கெலாட்டும் இருந்து இருக்கிறார். கமன் தொகுதி எம்.எல்.ஏ. ஜாஹிதா கான், சர்தார்சாஹர் தொகுதி எம்.எல்.ஏ. அனில் சர்மா, கிஷான்போல் தொகுதி எம்.எல்.ஏ. அமின் கக்ஜி, சவாய் மதோபுர் தொகுதி எம்.எல்.ஏ. தானிஷ் அப்ரா ஆகியோருக்கு எதிராக அக்கட்சியினர் போராடி வருகிறார்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications