ராஜஸ்தானில் பாஜக அமோக வெற்றி பெறும்! டிவி9 கருத்துக்கணிப்பு! காங்கிரஸ் கரைசேர வாய்ப்பில்லையாம்!
ராஜஸ்தான்: ராஜஸ்தானில் 100 முதல் 110 தொகுதிகள் வரை பெற்று பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என TV9 Pollstrat நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 90 முதல் 100 இடங்கள் வரை பெறலாம் எனவும் அந்தக் கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே நடந்த கோஷ்டிப்பூசலே இத்தகைய பின்னடைவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் ஆட்சியமைக்க 101 இடங்கள் தேவை. கடந்த சட்டசபைத் தேர்தலிலேயே காங்கிரஸ் நூலிலையில் தான் ராஜஸ்தானில் வெற்றிபெற்றது.

கிடைத்த வெற்றியை தக்க வைக்க காங்கிாஸ் போராடி வரும் நிலையில் எக்ஸிட் போல் முடிவுகள் காங்கிரஸாரை கலக்கம் அடைய வைத்துள்ளன. ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், தியா குமாரி, பாலக் நாத், கிரோடி லால் மீனா என பல நட்சத்திர வேட்பாளர்களை களமிறக்கியதன் மூலம் ராஜஸ்தானின் பாஜக வெற்றியை அறுவடை செய்யவுள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைப் பாஜக திரும்ப திரும்ப பிரதானமாக முன்வைத்து பிரச்சாரம் செய்தது அக்கட்சிக்கு பலன் கொடுத்துள்ளது. ராஜஸ்தானை பொறுத்தவரை எப்படியும் வெற்றிபெற வேண்டும் என காங்கிரஸ் -பாஜக ஆகிய இரண்டு கட்சிகள் தலைமையும் கடுமையாக போராடின. டிவி 9 கருத்துக்கணிப்பில் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு 90 இடங்களுக்கு மேல் கிடைக்கும், ஆனால் ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ், ஜான்கிபாத் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவில் ராஜஸ்தானில் காங்கிரஸ் அதிகபட்சம் 85 தொகுதிகளை தாண்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுக்கும் எனக் கருத்துக்கணிப்பு முடிவுகள் திட்டவட்டமக தெரிவிக்கின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications