அய்யோ போச்சே.. ராஜஸ்தானில் காங்கிரசுக்கு ஷாக்! பாஜகவுக்கு ஜாக்பாட்! டைம்ஸ்நவ் பரபர கருத்து கணிப்பு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தொடர்பாக டைம்ஸ்நவ்-இடிஜி ரீசர்ஜ் சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் ரீசல்ட் என்பது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியும், பாஜகவுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த மாதத்தில் மட்டும் இந்தியாவில் 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சத்தீஸ்கர், மிசோராம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு வரிசையாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதிகள் தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ராஜஸ்தானில் நவம்பர் 25ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் பிற மாநிலங்களை போல் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். இங்கு மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஒரு கட்சி வெற்றி பெற வேண்டும் என்றால் 101 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இங்கு காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் தான் டைம்ஸ் நவ்-இடிஜி ரீசர்ஜ் இணைந்து ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் குறித்து தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை நடத்தி உள்ளது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த கருத்து கணிப்பு என்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பின்படி தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் 68 தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 78 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. இதனால் அந்த கட்சியினருக்கு இந்த கருத்து கணிப்பு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது.
மாறாக டைம்ஸ்நவ்-இடிஜி கருத்து கணிப்பின் முடிவு என்பது பாஜகவுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதன்படி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ராஜஸ்தானில் பாஜக 114 முதல் 124 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு பலிக்கும் பட்சத்தில் ராஜஸ்தானில் பாஜக தனித்து ஆட்சியை பிடிக்கும். அதேபோல் காங்கிரஸ், பாஜகவை தவிர பிற கட்சிகள், சுயேச்சைகள் 6 முதல் 10 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளது என டைம்ஸ்நவ்-இடிஜி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications