ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியில் வெற்றி.. பதவியை ராஜினாமா செய்கிறார்
ஜெய்ப்பூர்: சர்தார்புரா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் அசோக் கெலாட் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பாஜக வேட்பாளர் டாக்டர் மகேந்திர ரத்தோரை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். எனினும் ஆட்சியை இழந்துள்ளதால் இன்று மாலை முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார்.
ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 25ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.. இதில் காலை தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. தற்போதைய நிலவரப்படி பாஜக 109 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 76 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்ற கட்சிகள் 14 இடங்களில் முன்னிலையில் உள்ளன. இந்த நிலவரம் மாறி மாறி வந்து கொண்டே இருக்கிறது.

ராஜஸ்தான் முதல்வராக தற்போது உள்ள அசோக் கெலாட், சர்தார்புரா தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இதில் 2008, 2013, 2018ஆகிய மூன்று முறை போட்டியிட்டு அசோக் கெலாட் வெற்றி பெற்றார். இப்போது நான்காவது முறை களத்தில் இறங்கினார். கெலாட்டை எதிர்த்து டாக்டர் மகேந்திர ரத்தோர் போட்டியிட்டார் ஆரம்ப கட்ட நிலவரப்படி பாஜக வேட்பாளர் மகேந்திர ரத்தோர் முன்னிலையில் இருந்தார். இந்நிலையில் சில சுற்று முடிவுகளுக்கு பின் அசோக் கெலாட் முன்னிலைக்கு வந்தார்.
இறதியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பாஜக வேட்பாளர் டாக்டர் மகேந்திர ரத்தோரை விட மிக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
2018ம் ஆண்டு சர்தார்புரா சட்டமன்றத் தேர்தலில், அசோக் கெலாட், பாஜகவின் ஷம்பு சிங்கை 45,597 வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதாவது 29.73% சதவீத வாக்கு வித்தியாசத்தில் வென்றார். 2013 ஆம் ஆண்டில் 18,478 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் சம்பு சிங் கெடாசரை தோற்கடித்தார். முன்னதாக 2008 தேர்தலில், அசோக் கெலாட், பாஜகவின் ராஜேந்திர கெலாட்டை தோற்கடித்து வெற்றி பெற்றார். ராஜஸ்தான் தேர்தலில் தோற்றதால் அசோக் கெலாட் முதல்வர் பதவியை இழப்பது உறுதியாகி உள்ளது. இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளிக்கிறார்.
வசுந்தரா ராஜே பின்னடைவு: இதனிடையே ராஜஸ்தான் முன்னாள் முதல்வரான வசுந்தரா ராஜே, ஜல்ராபட்டன் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இதில் பகுஜன் சமாஜ் கட்சி முதல் இடத்திலும், காங்கிரஸ் வேட்பாளர் இரண்டாவது இடத்திலும், பாஜக வேட்பாளரான வசுந்த்ரா ராஜே மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
2013 இல், பாஜகவின் வசுந்திரா ராஜே இந்தத் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 33.62% பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி சந்திராவத்தை 60,896 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். 2008 தேர்தலிலும் பாஜகவின் வசுந்தரா ராஜே இந்தத் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மோகன் லாலை 32,581 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.












Click it and Unblock the Notifications