Rajasthan Election Results: பாஜக மூத்த தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே வெற்றி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முன்னாள் முதல்வரான வசுந்தரா ராஜே, ஜல்ராபட்டன் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இதில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மகாசூட் முதல் இடத்திலும், காங்கிரஸ் வேட்பாளர் ராம்லால் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். பாஜக வேட்பாளரான வசுந்த்ரா ராஜே மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 25ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் பாஜக 64 இடங்களில் வெற்றி உடன் 111 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 33 இடங்களில் வெற்றியுடன் 64 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்ற கட்சிகள் 15 இடங்களில் முன்னிலையில் உள்ளன. இந்த வெற்றி நிலவரம் மூலம் ராஜஸ்தானில் பாஜக ஆட்சியமைக்க போவது உறுதியாகி உள்ளது.

இதனிடையே ராஜஸ்தான் முன்னாள் முதல்வரான வசுந்தரா ராஜே, ஜல்ராபட்டன் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இதில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மகாசூட் முதல் இடத்திலும், காங்கிரஸ் வேட்பாளர் ராம்லால் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். பாஜக வேட்பாளரான வசுந்த்ரா ராஜே மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. வசுந்தரா ராஜே மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் இருப்பது பாஜகவினரை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மகாசூட் முதல் இடத்திலும், காங்கிரஸ் வேட்பாளர் ராம்லால் இரண்டாவது இடத்திலும் இருந்த நிலையில், பாஜக வேட்பாளரான வசுந்த்ரா ராஜே மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தார். ஆனால் நேரம் செல்ல செல்ல அதிக வாக்குகள் பெற்ற நிலையில், வசுந்தரா ராஜே 53,193 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் ராம்லாலை தோற்கடித்தார்.
இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த வசுந்தரா ராஜே.. இது பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வியூகத்தால் வெற்றி கிடைத்தது. பாஜக தொண்டர்கள் மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
முன்னதாக 2013 இல், பாஜகவின் வசுந்தரா ராஜே ஜல்ராபட்டன் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 33.62% பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி சந்திராவத்தை 60,896 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். 2008 தேர்தலிலும் பாஜகவின் வசுந்தரா ராஜே இந்தத் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மோகன் லாலை 32,581 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.












Click it and Unblock the Notifications