அரசியல் இருந்து ஓய்வு பெறுகிறாரா வசுந்தரா ராஜே...?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
அரசக் குடும்பத்தை சேர்ந்த வசுந்தரா ராஜே இரண்டு முறை ராஜஸ்தான் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். தற்போது பாஜக தேசியத் துணை தலைவர்களில் ஒருவராக உள்ளார்.
கடந்த சில மாதங்களாக கட்சிப்பணிகளில் வசுந்தரா ராஜே ஆர்வம் காட்டாததால் அது குறித்து பாஜக தலைமை விசாரித்துள்ளது.

புறக்கணிப்பு
மேலும், சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தீனத் தயாள் உபாத்யாய் பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. ஆனால் நிகழ்ச்சி நடந்த தினத்தில் வசுந்தரா ராஜே வீட்டில் தான் இருந்துள்ளார். இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா கட்சித் தலைமைக்கு தகவல் அளித்துள்ளார்.

அகற்றம்
இதையடுத்து ராஜஸ்தான் மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வசுந்தரா ராஜே படம் அகற்றப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் பைரோன் சிங் செகாவத் உள்ளிட்டோர் படங்கள் எல்லாம் கட்சி அலுவலகத்தில் இருந்து அகற்றப்படாத நிலையில் வசுந்தரா ராஜேவின் படம் மட்டும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

அதிருப்தி
ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியாவுக்கும், வசுந்தரா ராஜேவுக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் சதீஷ் பூனியா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வசுந்தரா ராஜே தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், அவருக்கு கட்சித் தலைமை முக்கியத்துவம் தருவதை வசுந்தரா விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஓய்வு முடிவு?
தனது படம் கட்சி அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்டது வசுந்தரா ராஜேவுக்கு பெரும் அதிர்ச்சி அளித்ததால், அவர் அரசியலில் இருந்தே ஓய்வு பெறும் எண்ணத்திற்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே ராஜஸ்தான் மாநில காங்கிரஸில் முக்கிய தலைவராக திகழும் ஜோதிராதித்ய சிந்தியாவின் சொந்த அத்தை வசுந்தர ராஜே என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications