புராண கதை கும்பகர்ணனை தெரியும்.. ஆனால் ராஜஸ்தானில் ஆண்டுக்கு 300 நாட்கள் தூங்கும் இவரை தெரியுமா?
ஜெயப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர் ஒருவர் தற்போது ஆண்டுக்கு 300 நாட்கள் தூங்கியே பொழுதை கழிக்கிறாராம்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள நாகூரை சேர்ந்தவர் புர்காரம். 41 வயதாகும் இவர் ஆக்சிஸ் ஹைப்பர்சோமியா எனும் வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயினால் 23 ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்டார்.
இவர் பத்வா கிராமத்தில் பலசரக்கு கடையை நடத்தி வருகிறார். இந்த வினோத நோயால் மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே அவர் கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்கிறார்.

தூக்கம்
இந்த வியாதியின் தொடக்கத்தில் 5 முதல் 7 நாட்கள் வரை தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாராம். நாளடைவில் 20 முதல் 25 நாட்கள் வரை தூங்க தொடங்கினார். இவரை எழுப்புவதற்கு அவரது குடும்பத்தினர் மிகவும் பாடுபடுகிறார்களாம்.

தூக்கம்
முதலில் ஏதோ அசதியால் இவர் தூங்குவதாக மருத்துவர்கள் நினைத்துள்ளனர். ஆனால் இவரது தூக்க நாட்கள் அதிகரித்தவுடன் இது ஒரு வினோத நோய் என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இது போல் ஒரு வியாதி இருந்தால் அந்த நபரே தூக்கத்திலிருந்து எழ நினைத்தாலும் அவரது உடல் ஒத்துழைக்காது.

தலைவலி
தூங்குவதற்கு ஒரு நாள் முன்னர் கடுமையான தலைவலியை சந்திக்கும் புர்காரம், தூக்கத்திலிருந்து உணவு அருந்தவும் எழுந்திருக்க மாட்டாராம். இதனால் அவர் தூங்கும் போதோ உணவை ஊட்டுகிறார்களாம். இப்படியாக ஆண்டுக்கு 300 நாட்கள் வரை தூங்கியே கழிக்கிறாராம்.

குணப்படுத்த முடியாது
இந்த நோய் குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டார்கள். எனினும் கடவுள் அருளால் இவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என அவரது மனைவி லிச்மி தேவியும் தாய் கன்வாரி தேவியும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். புர்காரம் தூங்கும்போதே அவரை குளிக்க வைக்கும் பணிகளையும் அவரது மனைவி செய்கிறார். இந்த நோய் டிஎன்எஃப் ஆல்பா என்ற மூளைக்கு செல்லும் புரோட்டீன் குறைவால் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications