சந்திக்கும் எதிரெதிர் துருவங்கள்.. இன்று சச்சின் பைலட்-அசோக் கெலாட் மீட்டிங்.. ராஜஸ்தானில் திருப்பம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பெரிய அரசியல் குழப்பத்திற்கு பிறகு காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டும் இன்று சந்திக்க உள்ளனர்.
ராஜஸ்தானில் நாளை சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் பெரும்பாலும் முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று கூறுகிறார்கள்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்புதான் ராஜஸ்தானில் அரசியல் குழப்பங்கள் முடிவிற்கு வந்தது. அங்கு சச்சின் பைலட் ஒரு மாதமாக செய்து வந்த அரசியல் கலகம் முடிவிற்கு வந்தது.

சச்சின் பைலட்
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் சச்சின் பைலட்டை சந்தித்து பேசினார்கள். மூன்று நாட்கள் முன் நடந்த இந்த கூட்டத்தில் சச்சின் பைலட்டின் கோரிக்கைகளை ஏற்பதாக பிரியங்கா, ராகுல் இருவரும் அறிவித்தனர். அதோடு சச்சின் பைலட்டிற்கு உரிய மரியாதை கண்டிப்பாக கட்சியில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

டெல்லி அரசியல்
டெல்லி அரசியலில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறுகிறார்கள். இந்த நிலையில்தான் ராஜஸ்தானில் பெரிய அரசியல் குழப்பத்திற்கு பிறகு காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டும் இன்று சந்திக்க உள்ளனர். இன்று அங்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க உள்ளது. இதில்தான் சச்சின் பைலட் அசோக் கெலாட் இருவரும் சந்திக்க உள்ளனர்.

கசப்பு
மிகவும் கசப்பான மோதலுக்கு பின் இவர்கள் இருவரும் சந்திக்க உள்ளனர். அதிருப்தி எம்எல்ஏக்களை மன்னித்துவிட்டதாக ஏற்கனவே அசோக் கெலாட் அறிவித்துவிட்டார். அதேபோல் கட்சியில் இப்படி நடப்பது சகஜம். எனக்கு எதிராக சிலருக்கு கருத்துக்கள் இருந்தால் அதை தாராளமாக என்னிடம் சொல்லலாம். சில விஷயங்களை மறந்துவிட்டு கடந்து விட வேண்டும், என்று அசோக் கெலாட் குறிப்பிட்டு இருந்தார்.

பதவி இல்லை
இன்னொரு பக்கம் சச்சின் பைலட் , நான் பதவிக்கு ஆசைப்பட்டு இதை செய்யவில்லை. ராஜஸ்தானில் காங்கிரஸில் தேவையான மாற்றங்களை கொண்டு வரவே இப்படி செய்தேன். சிலா விஷயங்களை மறக்க முடியாது. ஆனாலும் அதை கடந்து செல்ல வேண்டும். கட்சியின் நலனுக்காக சில விஷயங்களை கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், என்று சச்சின் பைலட் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications