"என் சாவுக்கு பாஜக எம்எல்ஏ காரணம்”.. மரத்தில் தூக்கிட்டு சாமியார் தற்கொலை! சிக்கிய மரண வாக்குமூலம்
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சாமியார் ரவிநாத் என்பவர் தனது மரணத்துக்கு பாஜக எம்.எல்.ஏ.வே காரணம் என்று கூறி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாமியார் ரவிநாத். இவர் அங்குள்ள ராஜ்புரா மாவட்டத்தில் ஆசிரமம் நடத்தி வருகிறார். அவரது ஆசிரமத்துக்கு அருகே பின்மால் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. பூரா ராம் சவுதாரியின் நிலம் இருந்துள்ளது.
இதனால் சாமியாருக்கும், பாஜக எம்.எல்.ஏவுக்கும் நிலத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பாக எம்.எல்.ஏ. பூரா ராம் சில ஆட்களை அனுப்பி நிலத்தை அளவீடு செய்ததால் சாமியால் மன உளைச்சலில் இருந்து இருக்கிறார்.

சாமியார் தற்கொலை
இந்த நிலையில் சாமியார் ரவிநாத், சுந்தமாதா மாதா கோயில் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட சாமியார் மரண வாக்குமூலத்தை எழுதி வைத்து இருக்கிறார்.

பாஜக எம்.எல்.ஏ. மீது புகார்
அதில், பாஜக எம்.எல்.ஏ. நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதாகவும் இதனால் தற்கொலை செய்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும் தன்னுடைய உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். இந்த நிலையில் போலீசார் தற்கொலை கடிதத்தை மறைப்பதாக மற்ற சாமியார்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.

போலீஸ் குவிப்பு
சாமியார் தற்கொலைக்கு நீதி கேட்டு பலர் அப்பகுதியில் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவீதங்கள் ஏற்படாமல் தடுக்க ஆசிரமம் அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளார்கள். ஆசிரமத்துக்கு எதிரே இருக்கும் நிலம் பாஜக எம்.எல்.ஏவுடையது என்பதை போலீசாரும் உறுதிபடுத்தி இருக்கின்றனர்.

பாஜக எம்.எல்.ஏ. விளக்கம்
இதுகுறித்து பாஜக எம்.எல்.ஏ. பூரா ராம் கூறுகையில், "கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக ஆசிரமத்துக்கு எதிரே நிலம் வாங்கினேன். இந்த இடத்தில் ரிசார்ட் கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். தாசில்தாரிடம் அனுமதி பெற்ற பிறகே நிலம் அளவீடு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் சாமியார் இதற்கு எந்த எதிர்ப்பும் தெரியவில்லை. எங்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை."
-
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
வாட்ஸ்அப்பில் வந்த முத்தலாக்'.. குவைத்தில் இருந்து ராஜஸ்தான் பெண்ணுக்கு ஷாக் கொடுத்த கணவர் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications