அரசு பள்ளி வளாகத்திற்குள் மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி: ஆசிரியர் கைது
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அரசு பள்ளி வளாகத்திற்குள் 8ம் வகுப்பு பள்ளி மாணவியின் ஆடைகளைக் கிழித்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தானில் உள்ள சுன்சுனு மாவட்டத்தில் உள்ள சுகானா-ஜோகத் கிராமத்தில் சமஸ்கிருத ப்ரவேஷிகா என்ற அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 19ம் தேதி இப்பள்ளியின் ஆசிரியரான ஹவா சிங், அங்கு 8ம் வகுப்பு படித்து வரும் மாணவியை பள்ளியின் மதிய உணவுக்கூடத்திற்குள் உணவு சமைக்க வேண்டும் என்று கூறி அழைத்து அச்சிறுமியின் ஆடைகளைக் கழற்றியுள்ளார். சிறுமி தடுக்கவே, ஆடைகளை கிழித்து எறிந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

பயத்தில் அழுத சிறுமியை அடித்து மிரட்டியுள்ளார் அந்த காமுகன் ஹவா சிங், பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நேர்ந்த கொடூரத்தை தனது பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் கூறியதை அடுத்து ஹவா சிங் தலைமறைவானார்.
இந்த சம்பவத்தைக் கேட்டு கொதித்தெழுந்த கிராம மக்கள் ஆசிரியரை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கடந்த 20ம் தேதி அந்த ஆசிரியர் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். இந்நிலையில் தலைமறைவாகியிருந்த ஹவா சிங்கை நேற்று போலீசார் கைது செய்து, சிறார் வன் கொடுமை தடுப்பு சட்டம்(POCSO) உட்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சட்டத்தின் படி பாலியல் பலாத்காரத்திற்கான முயற்சி பாலியல் பலாத்காரமாகவே கணக்கில் கொள்ளப்படும்.
கைது செய்யப்பட்ட ஹவா சிங்கை போலீசார் உள்ளூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். விரைவில் சிறுமியின் வாக்கு மூலம் பதிவு செய்யப்படும் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆசிரியர் மீதான தண்டனை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications