வரதட்சிணைக்கு நோ! மணமகள் வீட்டில் இருந்து வெறும் 1 ரூபாய், தேங்காய் போதும்! அசரடித்த புதுமாப்பிள்ளை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மணமகன் ஒருவர் வரதட்சிணை எல்லாம் வேண்டாம், ஒரு ரூபாயும் ஒரு தேங்காயும் கொடுங்கள் போதும் என கூறி மணமகளை திருமணம் செய்து கொண்டது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டை கட்டி பார், கல்யாணத்தை செய்து பார் என்பது பழமொழி! வீட்டை கட்டினால் எப்படி நாம் நிர்ணயித்த தொகையை விட அதிக தொகை செல்லுமே தவிர, குறையவே குறையாது. அது போல்தான் கல்யாணம் என வந்தாலே இத்தனை ஆயிரம் , இத்தனை லட்சம், இத்தனை கோடி என பட்ஜெட் போட்டாலும் அது இது என செலவு இழுத்துக் கொண்டே செல்லும்.

கடைசியில் பட்ஜெட்டில் துண்டு விழும் அளவுக்கு இருக்கும். அதிலும் இந்த வரதட்சிணை என்ற ஒன்று இருக்கிறதே, கொடுப்பவர்கள் கொடுக்கும் வரை வாங்குபவர்களும் போதும் என சொல்லாத அளவுக்கு கொடுத்து கொண்டே இருக்க வேண்டும்.
இதில் சிலர் விதிவிலக்காக இருக்கத்தான் செய்கிறார்கள். அவரவர் வசதிக்கேற்ப மாப்பிள்ளைக்கு நகை, கார், பைக், பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட அனைத்து பாத்திரங்களும் கொடுக்கப்படுகிறது. இதில் சிலர் காலி நிலமாகவோ வீட்டையோ கூட வரதட்சிணையாக கொடுக்கிறார்கள்.
இந்த வரதட்சிணை தண்டனைக்குரிய குற்றம் என்றாலும் ஒரு கட்டத்தில் இன்னும் வாங்கி கொண்டு வா என அடித்து தாய் வீட்டுக்கு அனுப்பும் சம்பவங்கள் நடந்தேறுகின்றன. இந்த வரதட்சிணையால் எத்தனை தற்கொலைகள், கொலைகள், வன்முறைகள், தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.
கேரளாவில் விஸ்மயா, உத்ரா உள்ளிட்ட நிறைய பெண்கள் கொலை செய்யப்பட்டும் தற்கொலை செய்துக் கொண்டும் இறந்துள்ளனர். இதில் கர்ப்பிணிகளும் ஏராளம்! இப்படிப்பட்ட நிலையில் ராஜஸ்தானில் வெறும் ஒரு ரூபாய் பணத்தையும் ஒரு தேங்காயையும் வாங்கிக் கொண்டு வரதட்சிணையே வேண்டாம் என்று கூறி இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய் நாராயண் ஜாகர் என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அனிதா வர்மாவுக்கும் திருமணம் நடந்தது. அப்போது வரதட்சிணையாக ஒரு ரூபாயும் தேங்காயும் கொடுக்கப்பட்டது. இந்த திருமணத்தை பார்த்த பொதுமக்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
வரதட்சிணை வாங்காமல் திருமணம் செய்து கொண்ட ஜெய் நாராயண் ஜாகர் பொதுப் பணித் துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவர் திருமணம் செய்து கொண்ட அனிதா வர்மா, முதுகலைப் பட்டதாரி. அவரும் அரசுப் பணிக்கு தயாராகி வருகிறார். முதுகலை வரை மனைவியை அவருடைய பெற்றோர் படிக்க வைத்ததே வரதட்சிணை போன்றது தான் என மணமகன் ஜெய் நாராயண் தெரிவித்துள்ளார்.
வரதட்சிணை வேண்டாம் என்பதை தானே விரும்பி சொன்னதாகவும் அதை தன் பெற்றோரும் ஏற்றதாகவும் தனது மனைவிக்கு அரசு வேலை கிடைத்தால் அவரை முதுகலை படிக்க வைத்த காரணத்திற்காக ஓராண்டு சம்பளத்தை அவரது பெற்றோருக்கு கொடுக்கவும் தான் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறி அசத்தி ஆச்சரியப்பட வைக்கிறார் புதுமாப்பிள்ளை! ஆண்கள் மட்டும் வரதட்சிணை கேட்பதில்லை, பெண்களும்தான்!
வரன் தேடும் போது மாப்பிள்ளைக்கு சொந்த வீடு வேண்டும். அதுவும் அவர் பெயரில் இருக்க வேண்டும், மாப்பிள்ளைக்கு எந்த கடனும் இருக்கக் கூடாது, தனிக்குடித்தனம் நடத்த ஒப்புக் கொள்ள வேண்டும், மாதத்திற்கு லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும், தனி குடித்தனத்தில் தனது தாய், தந்தையை உடன் வைத்துக் கொள்ள வேண்டும் என ஏதேதோ கண்டிஷன்களை போடுகிறார்கள். எனவே ஆண்களும் வரதட்சிணையை கேட்காமல் பெண்களும் இத்தனை கண்டிஷன்களை போடாமல் இருந்தால் திருமணங்கள் உடனடியாக நடக்கும்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications