உணவுக் கட்டண உயர்வால் ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில் கட்டணங்கள் உயர்வு
டெல்லி: உணவுக் கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் உயர்த்தியுள்ளதால், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், துரந்தோ எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் பயணிப்போருக்கான டிக்கெட் கட்டணமும் அதிகரிக்கவுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி தாக்கலான ரயில்வே பட்ஜெட்டில் டீசல் விலை உயர்வு, மின்கட்டணம் அதிகரிப்பு, இதர செலவின பெருக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் ரயில் பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் ஆகியவற்றை 6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அனைத்து வகுப்பு ரயில் கட்டணமும் கடந்த 7-ம் தேதி 2 சதவீதம் உயர்த்தப்பட்டு, அது அன்றிரவே அமலுக்கும் வந்தது.
இந்நிலையில், தற்போது ராஜ்தானி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், துரந்தோ எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் உணவு கட்டணத்தை உயர்த்தியுள்ளது ரயில்வே நிர்வாகம். மேலும், அதற்கான கூடுதல் கட்டணத்தை ரயில் பயணக் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதியுடன் கூடிய அமரும் வசதி கொண்ட பெட்டிகளில் பயணிப்போருக்கான டிக்கெட் கட்டணம் ரூ. 25 வரை உயரும் எனவும், முதல் வகுப்பு ஏ.சி., எக்சிகியூடிவ் கிளாஸ் மற்றும் துரந்தோ ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகள் கட்டணம் ரூ. 27 வரை உயரும் எனவும் தெரிகிறது..
ரயில்களில் ஆண்டொன்றுக்கு 3.3 கோடி சாப்பாடு விற்பனை செய்யப்படுவதாகவும் கடந்த 14 ஆண்டுகளில் இதற்கான விலை உயர்த்தப்பட்டதில்லை எனவும் தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், இந்தப் புதிய கட்டணம் வரும் 17-ம் தேதி அமலில் வரும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்திலேயே ரயில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம்












Click it and Unblock the Notifications