காவிரி ஆணையம் கூடாது என ரஜினி சொல்ல வேண்டும்.. கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கண்டிஷன்!
காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவித்தால் மட்டுமே காலா படத்தை வெளியிட அனுமதிப்போம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை நிபந்தனை விதித்துள்ளது.
Recommended Video

பெங்களூர்: காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவித்தால் மட்டுமே காலா படத்தை வெளியிட அனுமதிப்போம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை நிபந்தனை விதித்துள்ளது.
ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் காலா படம் உலகம் முழுக்க எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. வுண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கபாலிக்கு பின் இந்த படம் வெளியாகிறது.

இந்த படம் வரும் 7ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. கர்நாடக மாநிலத்தில் மட்டும் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அம்மாநில திரைப்பட வர்த்தக சபை இந்த படத்தை திரையிட முடியாது என்று கூறியுள்ளது. ஆனால் அம்மாநில அரசு படத்திற்கு எந்த விதமான தடையும் விதிக்கவில்லை.
காவிரி பிரச்சனையில் ரஜினி தமிழகத்திற்கு ஆதரவாக பேசியதால், கன்னட அமைப்புகள் அவர் மீது கோபத்தில் உள்ளது. இதனால் காலா படத்தை திரையிட அவர்கள் மறுத்துள்ளனர். இந்த நிலையில் காலாவை வெளியிட ரஜினிக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. காவிரி குறித்து ரஜினி கூறிய கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவிக்க வேண்டும். காவிரி தொடர்பாக இரு மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினி கூற வேண்டும். விவசாயிகள் கூடி பேச்சு வார்த்தை நடத்த ரஜினி அழைக்க வேண்டும்.
ரஜினி இந்த எல்லா விஷயங்களுக்கும் நிபந்தனை இன்றி ஒப்புதல் அளிக்க வேண்டும். ரஜினி இந்த கோரிக்கையை ஏற்றால் மட்டுமே படத்தை வெளியிடுவோம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications