நாங்கள் நல்லவங்க, அதனால எங்க கூட வாங்க... ரஜினிக்கு அமித்ஷா மீண்டும் அழைப்பு
தமிழக பாஜகவை வலுப்படுத்த ரஜினிகாந்த் தங்களுடன் கரம் கோர்க்கவேண்டும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அழைப்புவிடுத்துள்ளார்.
டெல்லி: ரஜினிகாந்த் பாஜகவில் இணைந்து அரசியல் பிரவேசம் மேற்கொள்ளவேண்டும் என்று அக்கட்சியின் தேசிய செயலர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் நடக்குமா? நடக்காதா? என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் கடந்த 19 ம் தேதி ரசிகர்கள் மத்தியில், வாழ்க்கையில் எதிர்ப்பு, ஆதரவு இருப்பது சகஜம்தான். எதிர்ப்பு இல்லாமல் வளரவே முடியாது. அதுவும் அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். "நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக இருங்கள்" என அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றி அதிரடியாக பேசினார்.

ரஜினிகாந்த் இந்த அரசியல் பேச்சு குறித்து பல்வேறு தலைவர்கள் தங்களுடைய கருத்தை தமிழகத்தில் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக பாஜக அவருக்கு, வலைவீசுவதாக தகவல்கள் பரவியது.
எங்களுடைய கதவு ரஜினிக்கு எப்போதும் திறந்தே இருக்கும் என பாஜக தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்தார். மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உள்பட மூத்த பாஜக தலைவர்களின் கருத்து நடிகர் ரஜினிகாந்த் தங்களுடைய கட்சியில் இணைய வேண்டும் என்பதே என்று தெளிவாக தெரிகிறது.
இந்த நிலையில் மீண்டும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் , "நாங்கள் நல்லவர்கள். பாஜக கட்சிக்கு வர வரவேற்கிறோம். இது தொடர்பாக ரஜினிகாந்த் ஜி, தான் இறுதி முடிவை எடுக்கவேண்டும். இப்போதைய நிலையில் தமிழகத்தில் பாஜக பலவீனமாக உள்ளது. மாநிலத்தில் எங்களுடைய அடிப்படையை பலப்படுத்த மத்திய அரசின் கொள்கை மற்றும் நல்லாட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்," என்று தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications