அடங்காத வன்முறை... முடங்கிய இயல்பு வாழ்க்கை... காஷ்மீரில் ராஜ்நாத்சிங் 2-வது நாளாக இன்றும் ஆய்வு
ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்க கமாண்டர் புர்கான்வானி கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதையடுத்து காஷ்மீரில் வன்முறை வெடித்தது. 47 வது நாளாக நேற்றும் காஷ்மீர் மாநிலத்தில். இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது.

காஷ்மீர் வன்முறைகள் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று சிறப்பு விமானம் மூலம் காலை 11.30 மணிக்கு ஸ்ரீநகர் விமான நிலையம் சென்றடைந்தார். 2 நாள் பயணமாக வருகை தந்த அவர் முதல் கட்ட பங்குவர்த்தக பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், ராணுவம், போலீஸ், துணை ராணுவ அதிகாரிகளை சந்தித்து காஷ்மீர் நிலவரம் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார்.
காஷ்மீர் ஆளுநர் என்.என்.ஓரா மற்றும் முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைகளுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங், காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப வேண்டும், அமைதி வரவேண்டும் என்று விரும்பும் அனைவருடனும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது என்றார்.
இன்றும் அவர் ஸ்ரீநகரில் உள்ள நேரு விருந்தினர் இல்லத்தில் தங்கி பல்வேறு தலைவர்களை, அமைப்புகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications