கர்நாடகத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் நிலம் வாங்கினாரா ரஜினிகாந்த்?
பெங்களூரு: கர்நாடகாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் ரஜினிகாந்த் நிலம் வாங்கியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடக அரசு தலைமைச்செயலாளர் அரவிந்த் ஜாதவின் தாயார் தாராபாய் மாருதிராவ் ஜாதவ் சட்டவிரோதமாக நிலம் வாங்கி பணம் சம்பாதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் தலைமைச்செயலாளர் பதவியில் இருந்து அரவிந்த்ஜாதவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே தாராபாய் மாருதிராவ் ஜாதவ் சட்டவிரோதமாக வாங்கி மேம்படுத்திய நிலத்தில் நடிகர் ரஜினிகாந்த் 2 வீட்டுமனைகளை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
விவசாயியாக இல்லாத நிலையில் விளைநிலத்தை வாங்கி அதை விவசாயமல்லாத நிலமாக மாற்றி சட்டவிரோதமாக பணம் சம்பாதித்துள்ளதாக தலைமைச் செயலரின் தாயார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலத்தில் சர்வே எண் 80-இல் நடிகர் ரஜினிகாந்த் 0.813 ஏக்கர் பரப்பளவு கொண்ட 2 வீட்டுமனைகள் வாங்கியிருக்கிறார். 2 வீட்டுமனைகளுக்கான கிரைய பத்திரம் 1997 ஆக.11-ஆம் தேதி பதிவுசெய்யப்பட்டுள்ளது. பத்திரத்தில் வாங்கியவரின் பெயர் சிவாஜிராவ் கேய்க்வாட் (எ)ரஜினிகாந்த் தபெ ரானோஜிராவ் என்றும், முகவரி: போயஸ்கார்டன், சென்னை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0.45 ஏக்கர் பரப்பளவு கொண்ட முதல் வீட்டுமனை ரூ.3.25 லட்சத்திற்கும் 0.35 ஏக்கர் பரப்பளவு கொண்ட 2-வது வீட்டுமனை ரூ.2.25 லட்சத்திற்கும் வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications