படிப்பறிவில்லாத ரஜினியுடன் கூட்டணி சேர்ந்தால் சர்வமும் நாசம்.. சு.சுவாமி திடீர் சாபம்
படிப்பறிவில்லாத ரஜினிகாந்துடன் கூட்டணி சேருவதால் நாசம்தான் ஏற்படும் என்கிறார் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி.
Recommended Video

டெல்லி: படிப்பறிவே இல்லாத ரஜினிகாந்துடன் கூட்டணி வைத்தால் பெரும் நாசம்தான் ஏற்படும் என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி சாடியுள்ளார்.
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். ஆனாலும் தொடங்கவில்லை. மோடியுடன் இணைந்தால் ரஜினிகாந்த் முதல்வராகிவிடுவார் என இன்னொரு பக்கம் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறிவருகிறார்.

ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை பேசுவதால் பாஜகவுடன் கூட்டணி சேருவார் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரஜினிகாந்தையும் குருமூர்த்தியையும் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து சாடி வருகிறார்.
சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் நேற்று, குருமூர்த்தி ஆர்.எஸ்.எஸ். தத்துவவாதி அல்ல. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அப்படி ஒரு போஸ்ட்டே இல்லை; வேண்டுமானால் ரஜினிகாந்துக்கு பி.ஆர்.ஓ. என கூறலாம் என கிண்டலடித்திருந்தார்.
இந்நிலையில் இன்று நியூஸ் 18 டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், ரஜினிகாந்த் படிப்பறிவே இல்லாதவர், நடிகர்கள் அரசியலில் கோலோச்சலாம் என்கிற காலம் மலையேறிவிட்டது. இந்த மாதிரி ஆட்களுடன் கூட்டணி வைத்தால் நாசம்தான் ஏற்படும் என சாபமிட்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications