15வது நாளாக தொடர்ந்த எம்.பி.க்களின் அமளி.. ராஜ்யசபா திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு
டெல்லி: எதிர்க்கட்சிகள் அமளியால், ராஜ்யசபா இன்று நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, தெலுங்கு தேசம் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து தர்ணாக்கள் நடத்தி வருகிறார்கள். காவிரிக்காக அதிமுக எம்.பிக்கள் தர்ணா நடத்தி வருகிறார்கள். இதனால் இரு அவைகளின் பணிகளும் பாதிக்கப்படுகின்றன.

ராஜ்யசபாவில் தொடர்ந்து 15வது நாளாக இன்றும் தெலுங்கு தேசம் எம்.பிக்கள் தர்ணா நடத்தினர். ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு இருக்கையை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர்.
வெங்கையா நாயுடு சில அறிவிப்புகளை வெளியிடும்போதுகூட, தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் அமைதிகாக்கவில்லை. இதையடுத்து, ராஜ்யசபா திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் கூடும் என்று வெங்கையா நாயுடு அறிவித்து அவையை ஒத்தி வைத்தார்.
ராஜ்யசபா எம்.பிக்களுக்கு வெங்கையா நாயுடு நேற்று அளிப்பதாக இருந்த விருந்து நிகழ்ச்சியை ரத்து செய்திருந்தார். அவையை தொடர்ந்து முடக்கி வந்ததால், விருந்து ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications