துரோகம்! மன்னிக்கவே முடியாது! ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டு! பாஜக பெண் எம்எல்ஏ நீக்கம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராஜ்யசபா தேர்தலில் கட்சி விதிகளை மீறி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்த பாஜக எம்எல்ஏ
ஷோபாராணி குஷ்வா கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் 15 மாநிலங்களில் இருந்து 57 ராஜ்யசபா எம்பிக்களுக்கான தேர்தல் ஜூன் 10ல் அறிவிக்கப்பட்டது. தமிழகம் உள்பட 11 மாநிலங்களை சேர்ந்த 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகம், மகாராஷ்டிரா மாநிலங்களில் 16 இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடந்தது. இதில் கட்சி எம்எல்ஏக்கள் மாற்றி ஓட்டளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

4 இடத்துக்கு ஐவர் போட்டி
ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தமட்டில் 4 இடங்கள் காலியாகன இருந்தன. காங்கிரஸ் சார்பில் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக் மற்றும் பிரமோத் திவாரி என மூவர் போட்டியிட்டனர். பாஜக சார்பில் கன்ஷியாம் திவாரி, பாஜக ஆதரவுடன் சுபாஷ் சந்திரா ஆகியோர் களமிறங்கினர். இதனால் 4 இடங்களுக்கு ஐவர் போட்டியிட்டனர்

காங்கிரஸில் 3 பேர் வெற்றி
இதனால் எம்எல்ஏக்களை பிற கட்சியினர் இழுக்கலாம் என்ற சூழல் நிலவியது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக கட்சியினர் தங்கள் கட்சி எம்எல்ஏக்களை ரெசார்ட்டில் தங்க வைத்தனர். ஜூன் 10ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி மற்றும் பாஜகவின் கன்ஷியாம் திவாரி ஆகியோர் வெற்றி பெற்றனர். பாஜக ஆதரவுடன் போட்டியிட்ட சுபாஷ் சந்திரா தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் பிற கட்சி எம்எல்ஏக்கள், சுயேச்சைகள் ஆதரவு அளித்திருந்தனர்.

பாஜகவில் இருந்து நீக்கம்
இதற்கிடையே தான் பாஜக எம்எல்ஏ ஷோபாராணி குஷ்வா, கட்சியின் உத்தரவை மீறி ஓட்டளித்தது தெரியவந்தது. இவர் காங்கிரஸ் உறுப்பினருக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளது. இதையடுத்து அவருக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது. அதோடு இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதுபற்றி பாஜக மத்திய ஒழுங்கு குழு செயலாளர் ஓம் பதக் வெளியிட்ட அறிக்கையில், கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விடுவிக்கப்படுவதாகவும், கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் இந்த ஷோபாராணி குஷ்வா?
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்எல் குஷ்வாவின் மனைவியான இவர் தோல்பூர் தொகுதியில் பாஜக சார்பில் 2018 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் இவரது கணவரான குஷ்வா பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏவாக இருந்த நிலையில் கொலை வழக்கில் 2016ல் ஆயுள் தண்டனை விதிக்கப்ட்டது. இதையடுத்து ஷோபாராணி குஷ்வாவை பாஜக அந்த தொகுதியில் களமிறக்கி வாகை சூடியது குறிப்பிடத்தக்கது.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications