ராஜ்யசபாவை முன்வைத்து மாநில கட்சிகளிடம் 'சூதானமாக' நடக்க வேண்டிய நிலையில் பாஜக
டெல்லி: ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அவசியம் என்பதை உணர்ந்து மாநில கட்சிகளிடன் அனுசரணையான போக்கை கடைபிடிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.
லோக்சபாவில் 282 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் கோலோச்சுகிறது பாரதிய ஜனதா. ஆனால் ராஜ்யசபாவில் பாஜகவுக்கும் இருக்கும் எம்.பி.க்களை வைத்துக் கொண்டு ஒரு சட்டத்தைக் கூட அங்கு நிறைவேற்றிவிட முடியாது.
ராஜ்யசபாவில் மொத்தம் 250 எம்.பிக்கள் உள்ளனர். இதில் 12 பேர் நியமன எம்.பி.க்கள். 238 பேர் கட்சி எம்.பிக்கள்.

காங்கிரஸுக்கு 68 எம்.பிக்கள்
தற்போதைய ராஜ்யசபாவில் மொத்தம் 245 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் 12 பேர் நியமன எம்.பிக்கள். 233 பேர் கட்சிகளின் எம்.பிக்கள். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 68 எம்.பிக்கள் உள்ளனர்.

பாஜகவுக்கு 46
பாரதிய ஜனதாவுக்கோ 46 எம்.பிக்கள்தான் இருக்கின்றனர். அதன் கூட்டணிக் கட்சி எம்.பிக்களையும் சேர்த்தாலும் கூட மொத்தம் 65 தான் தேறுகிறது.

மாநிலக் கட்சிகள் தயவு அவசியம்
இதனால் அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தயவில்தான் பாரதிய ஜனதா சட்டங்களை நிறைவேற்ற முடியும்.

ராஜ்யசபாவில் கட்சிகளின் எம்.பிக்கள்?
அதிமுக - 10
திரிணாமுல் காங்கிரஸ்- 12
பிஜூ ஜனதா தளம் -6
பகுஜன் சமாஜ்- 14
ஐக்கிய ஜனதா தளம்- 9
சமாஜ்வாடி - 9

அதிமுக தவிர
இதில் அதிமுகதான் பாஜகவை ஆதரிக்கக் கூடிய கட்சியாக இருக்கிறது. பிஜூ ஜனதா தளம் சில நேரங்களில் ஆதரிக்கலாம். அதனால் அதிமுக என்ன நிபந்தனை வைத்தாலும் நிச்சயம் அதை அப்படியே ஏற்க வேண்டிய நிலையில்தான் பாஜக இருக்கிறது.

ஜெக்கு வாழ்த்து
இதனை மனதில் கொண்டுதான் அதிமுகவின் தேர்தல் வெற்றிக்கு பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் வாழ்த்து கூறியதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

திரிணாமுல், பகுஜன், சமாஜ்வாடி எதிர்க்கும்
அதே நேரத்தில் பாஜகவை திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம் கடுமையாக எதிர்க்கவும் நேரிடும்.

அணுசரணை
அப்படி எதிர்க்கும் போது பாஜக அரசால் எந்த சட்டமும் நிறைவேற்ற முடியாமல் போய்விடும். அதனால் எந்த ஒரு மாநிலக் கட்சியையும் பகைத்துக் கொள்ளாமல் "பவிசா"க நடந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் பாஜக இருக்கிறது.

பாஜ கூட்டணிகள் - 15
தெலுங்குதேசம் 6
சிரோமணி அகாலி தளம் -3
லோக் ஜனசக்தி - 1
சிவசேனா 3
மிசோ முன்னணி- 1
நாகா மக்கள் முன்னணி-1

121 எம்.பிக்கள் தேவை
ராஜ்யசபாவில் ஒரு மசோதா நிறைவேற அரசுக்கு தேவையான ஆதரவு 121 என்பது குறிப்பிடத்தக்கது.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications