திடீர் அலர்ட்.. அயோத்தி ராமர் கோவிலுக்கு ஒருநாள் முன்பே செல்லும் மோடி? மாறப்போகும் பிளான்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பிரதமர் மோடி செல்வதாக திட்டமிடப்பட்டுள்ள பிளானில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. திடீரென வந்த எச்சரிக்கையால் பிரதமர் மோடி ஒருநாள் முன்பாகவே அயோத்தி ராமர் கோவில் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பல்வேறு சட்ட போராட்டங்களை பிறகு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 2019ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணி என்பது தொடங்கியது. கோவில் கட்டுவதற்கான ஸ்ரீராம ஜென்ம தீர்த்தா எனும் அறக்கட்டளை அமைக்கப்பட்டது.

அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கட்டுமான பணி என்பது வேகமெடுத்தது. ஸ்ரீராம ஜென்ம தீர்த்தா அறக்கட்டளை தான் கோவில் கட்டும் பணியை கண்காணித்து வருகிறது.
நாகரா கட்டக்கலையில் 3 அடுக்குகளாக ராமர் கோவில் கட்ட திட்டமிடப்பட்டு பணி சுறுசுறுப்பாக நடந்தது. தற்போது முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் வரும் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக 11 நாள் விரதத்தை தொடங்கி உள்ள பிரதமர் மோடி தற்போது பல கோவில்களுக்கு சென்று வருகிறார்.
ராமாயணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் கோவில்களுக்கு பிரதமர் மோடி சென்று தரிசனம் செய்து வருகிறார். நேற்று ஆந்திர மாநிலம் லெபாக்ஷி என்ற இடத்தில் உள்ள வீரபத்ர சுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். இது ஜடாயு பறவை மோட்சமடைந்த இடத்தில் அமைந்துள்ள கோவில் என கூறப்படுகிறது. அதேபோல் வரும் 20ம் தேதி பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார்.
மேலும் பல கோவில்களுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். அதன்பிறகு ஜனவரி 22ல் பிரதமர் மோடி அயோத்தி சென்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது பிரதமர் மோடியின் இந்த பயண திட்டத்தில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது பிரதமர் மோடி வரும் 22ம் தேதிக்கு பதில் முந்தைய நாளான ஜனவரி 21ம் தேதியே அயோத்திக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஜனவரி 22ல் பிரதமர் மோடியின் பயண திட்டத்துக்கான நேரத்தில் பனிமூட்டம் என்பது நிலவலாம் என கூறப்படுகிறது. இதனால் அவரது விமான சேவை என்பது பாதிக்கப்படலாம்.
இதனால் விழா நிகழ்வுக்கு தாமதம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதமர் மோடி முன்கூட்டியே ஜனவரி 21ம் தேதி அயோத்தி சென்று அங்கு தங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது இன்னும் வரவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications