அயோத்தி ராமர் கோவில் கருவறையில் கால் தடுக்கி விழப்போன மோடி.. பதறிய அர்ச்சகர்கள்.. வீடியோ
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கருவறையில் பிரதமர் மோடி பிரான் பிரதிஷ்டை செய்தார். இந்த வேளையில் அவர் கால் தடுக்கி கீழே விழப்போனதால் அங்கிருந்த அர்ச்சகர்கள் பதறிப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் கடந்த 16ம் தேதி தொடங்கியது. கடந்த 17 ம் தேதி அயோத்தி ராமர் கோவிலில் 5 வயது பால ராமர் சிலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

கடந்த 18 ம் தேதி கோவிலில் சிலை நிறுவப்பட்டது. இதையடுத்து இன்று கோவிலில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் 12.15 மணிக்கு தொடங்கிய பிரான் பிரதிஷ்டை சடங்குகள் 12.45 மணி வரை நடந்தது.
பிரதமர் நரேந்திர மோடி கோவில் கருவறைக்கு சென்று அர்ச்சகர்களுடன் பால ராமர் சிலைக்கு பிரான் பிரதிஷ்டை செய்தார். பிரான் பிரதிஷ்டை முடிந்த பிறகு பால ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டது. திருவுறுவ சிலையாக இருந்த பால ராமர் தெய்வீக சிலையாக மாறி அருள் பாலித்தார். பிரதமர் நரேந்திர மோடி தான் கும்பாபிஷேக விழாவில் ‛முக்கிய யாஜ்மன்’ ஆக நியமனம் செய்யப்பட்டு இருந்தார்.
சமஸ்கிருத மொழியில் யாஜ்மன் என்பதற்கு சடங்குகளை முன்னின்றி செய்யும் நபர் என்று பொருள்படும். அதன்படி பிரதமர் மோடி தான் இன்றைய கும்பாபிஷேக விழாவில் பால ராமர் சிலையின் பாதத்தில் அமர்ந்து பிரான் பிரதிஷ்டை சடங்குகளை செய்தார். அர்ச்சகர்கள் வழிக்காட்டுதலில் அவர் இந்த சடங்குகளை செய்தார்.
முன்னதாக இந்த பிரான் பிரதிஷ்டை சடங்குகளை செய்வதற்காக பிரதமர் மோடி கோவில் கருவறைக்குள் நடந்து வந்தார். பால ராமர் சிலை முன்பு அவர் நடந்து சென்றபோது திடீரென்று கால் தடுக்கி விழப்போனார். ஆனால் உடனடியாக சுதாரித்து கொண்ட பிரதமர் மோடி விழாமல் நின்றார். இருப்பினும் பிரதமர் மோடி கால் தடுக்கியதை பார்த்த அர்ச்சகர்கள் உள்பட அனைவரும் பதறிப்போயினர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications