ஐஸ்வர்யா ராயை இழுத்து மோடியை விமர்சித்த ராகுல்.. பரபரப்பாகும் ராமர் கோவில் விவகாரம்.. என்னாச்சு?
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக பிரதமர் மோடியை, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மாமனாரும், நடிகருமான அமிதாப் பச்சனை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி பிரதமர் மோடியை விளாசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் விவகாரம் என்பது கடந்த 500 ஆண்டுகளாக சர்ச்சையாகி வந்தது. நீண்டகால சட்ட போராட்டத்துக்கு பிறகு கடந்த 2019ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதாவது அயோத்தியில் ராமர் கோவில் கட்டி கொள்ளலாம் என உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

இதையடுத்து 2020ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். ராமர் கோவில் 3 அடுக்குகளாக அமைய உள்ள நிலையில் முதல் தளத்தில் பணிகள் முழுவதுமாக முடிந்துள்ளது. கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 22ம் தேதி நடந்தது.
முன்னதாக கடந்த மாதம் 18 ம் தேதி கோவில் 5 வயது நிரம்பிய பால ராமர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலைக்கு கடந்த மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. சிலைக்கு பிரான் பிரதிஷ்டை சடங்குகளை பிரதமர் மோடி செய்தார். அதன்பிறகு ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டது. கும்பாபிஷேக நாளில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றவர்கள் மட்டுமே தரிசனம் செய்தனர். நடிகர் அமிதாப் பச்சன், அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பல்வேறு துறைகளில் பிரபலமானவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர்.
அதன்பிறகு ஜனவரி 23ம் தேதி முதல் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் கூட காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியை இந்து அமைப்பினர், பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா தொடர்பாக ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தி தற்போது ‛பாரத் ஜோடோ நியாய யாத்திரை' மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை உத்தர பிரதேச மாநிலத்துக்குள் நுழைந்துள்ளது. அங்குள்ள பிரக்யாராஜ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் தான் பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சனம் செய்தள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:
கடந்த மாதம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று விழாவை நடத்தினார். இந்த விழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மாறாக பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோரை பிரதமர் மோடி விழாவுக்கு அழைத்து இருந்தார். இந்தியாவை வழிநடத்தும் மக்கள் இந்த கோவில் கும்பாபிஷேக விழாவில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஓபிசி மற்றும் எஸ்சி, எஸ்டி சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அழைக்கப்படவில்லை. நீங்கள் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏதேனும் ஓபிசி அல்லது எஸ்டி, எஸ்டி முகங்களை பார்த்தீர்களா?. நாட்டை ஒருபோதும் நீங்கள் (பிரதமர் மோடி) கட்டுப்படுத்த முடியாது என்பதை மக்கள் விரைவில் காட்டுவார்கள்'' என விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்துக்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதாவது ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தும் வராத கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி இதுபற்றி பேச எந்த உரிமையும் இல்லை என பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இது தற்போது விவாதமாக மாறியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications