ரூ.13 லட்ச கோட் யாருடைய கிரெடிட் கார்டில் வாங்கினீர்கள் மோடிஜி... குத்து ரம்யா கேள்வி

மோடி அணிந்திருக்கும் ரூ. 13 லட்சம் மதிப்பிலான கோட் யாருடைய கிரெடிட் கார்டில் வாங்கினீர்கள் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரம்யா கேள்வி எழுப்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பிரதமர் மோடியை வெளுத்து வாங்கும் குத்து ரம்யா- வீடியோ

    பெங்களூர்: பிரதமர் மோடி அணிந்திருக்கும் லோரோ பியானா ஜாக்கெட் யாருடைய கிரெடிட் கார்டில் வாங்கியது என்று குத்து ரம்யா கேள்வி எழுப்பியுள்ளார்.

    கர்நாடகாவில் வரும் 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    Ramya asked Modiji that from whose credit card he bought coat

    3 கட்சிகளும் ஆட்சியை பிடிப்பதிலும், தக்க வைப்பதிலும் முனைப்பு காட்டி வருகின்றனர். காங்கிரஸுக்கு ஆதரவாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரம்யா தனது டுவிட்டரில் கூறுகையில், மோடி அணிந்து இருந்த கோட்டின் பெயர் லோரோ பியானா ஜாக்கெட் ஆகும். உலகில் உள்ள மிகவும் விலை உயர்ந்த ஆடைகளில் இதுவும் ஒன்றாகும். இதன் தற்போதைய இந்திய மதிப்பு, ரூபாய். 13,63,324 ஆகும்.

    ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில், நரேந்திர மோடி ஜி, நீங்கள் அணிந்திருக்கும் ஆடை மிகவும் பேன்ஸியாக உள்ளது. இந்த கோட் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இதன் விலை மிகவும் குறைவு. வெறும் 17,000 யூரோதான். யாருடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தி இதை வாங்கினீர்கள் மோடி? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    இதற்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இத்தாலிய கண்ணாடி போட்டுக் கொண்டு பார்ப்பதாக பாஜக குற்றம்சாட்டியிருந்தது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+