உங்க "மனைவி"யும் நடிகைதானே.. அவரை பற்றி இப்படி பேசுவீர்களா? குமாரசாமிக்கு குட்டு வைத்த 'குத்து ரம்யா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: உங்க பொண்டாட்டியும் ஒரு நடிகைதானே, அவரை பற்றி இப்படித்தான் பேசுவீங்களா என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை பார்த்து விளாசியுள்ளார் நடிகையும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பியுமான நடிகை ரம்யா.

தமிழில் குத்து, பொல்லாதவன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளவர் ரம்யா. கன்னடத்தில் முன்னணி நடிகையாக உள்ள இவர் அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மண்டியா மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று எம்.பியாக பதவி வகித்தவர் ரம்யா. சில மாதங்களாக வெளிநாட்டில் வசித்த ரம்யா தற்போது மீண்டும் தீவிர அரசியலில் குதித்துள்ளார்.

இரு பிரபலங்கள்

இரு பிரபலங்கள்

ரம்யா வருகையால் மண்டியா மாவட்டத்தில் பலமிக்கதாக உள்ள தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதள கட்சிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மண்டியா மாவட்டத்தை சேர்ந்த நடிகர் அம்பரீஷ் மாநில அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார். ரம்யாவும் மக்களை ஈர்க்கிறார்.

ம.ஜ.த சரிவு

ம.ஜ.த சரிவு

அம்பரீஷ் மற்றும் ரம்யா ஆகிய இவ்விரு ஒக்கலிக ஜாதி பிரமுகர்களால், மண்டியா மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும், ஒக்கலிகர் சமுதாய வாக்குகள் ம.ஜ.த பக்கம் செல்வது குறைந்துள்ளது.

குமாரசாமிக்கு கோபம்

குமாரசாமிக்கு கோபம்

தனது வாக்கு வங்கியில் ஓட்டை விழுவதால் ம.ஜ.த மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி, ரம்யா மீது கோபமடைந்துள்ளார். கர்நாடகாவில் நடைபெறும் ஜில்லா மற்றும் தாலுகா பஞ்சாயத்து தேர்தல் பிரச்சாரத்திற்காக மண்டியா சென்ற குமாரசாமி தனது கோபத்தை வெளிக்காட்டினார்.

விளாசிய குமாரசாமி

விளாசிய குமாரசாமி

மண்டியாவில், ம.ஜ.த தொண்டர்களிடம் பேசிய குமாரசாமி, ரம்யா, எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மண்டியாவுக்கு பெரும் சாபக்கேடு நேர்ந்துவிட்டது. கடந்த ஓராண்டில் இம்மாவட்டத்தை சேர்ந்த ஆயிரம் விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துள்ளனர்.

நடிகையை நம்பாதீர்கள்

நடிகையை நம்பாதீர்கள்

ரம்யா ஒரு நடிகை. அவரை யாரும் நம்ப வேண்டாம். ரம்யா போன்ற நடிகைகள் சொல்வதை நிறைவேற்ற மாட்டார்கள். மக்களின் கஷ்டம் அவர்களுக்கு புரியாது. இவ்வாறு குமாரசாமி ரம்யாவை விமர்சனம் செய்தார்.

குமாரசாமி குடும்பம்

குமாரசாமி குடும்பம்

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ரம்யா, இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசுகையில், குமாரசாமி சினிமா தயாரிப்பாளராக பதவி வகித்தவர். அவரது மனைவி (இயற்கை திரைப்பட ஹீரோயின் குட்டி ராதிகா) இன்னமும் சினிமாவில் நடித்துக்கொண்டுள்ளார். மகன் ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளார்.

சில்லரை அரசியல்

சில்லரை அரசியல்

முதலில் அவர் தனது வீட்டில் உள்ளோரை பற்றி பேசிவிட்டு, பிற நடிகைகளை பற்றி வாய் திறக்கட்டும். விவசாயிகள் தற்கொலையை அரசியல் செய்யும் குமாரசாமியை போல சில்லரை அரசியல் நான் செய்ய மாட்டேன். இவ்வாறு குத்து ரம்யா கூறியுள்ளார். ரம்யாவின் பதிலடி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி அனிதா

மனைவி அனிதா

குமாரசாமியின் மனைவி அனிதா. இவர் கடந்த பாஜக ஆட்சி காலத்தில் எம்.எல்.ஏவாக பதவி வகித்தவர். கடந்த தேர்தலில் தோல்வியை தழுவியதால், கேபிள் மற்றும் ம.ஜ.த குடும்ப தொலைக்காட்சி சேனலான 'கஸ்தூரி'-யின் நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.

குட்டி ராதிகாவை சீண்டிய ரம்யா

குட்டி ராதிகாவை சீண்டிய ரம்யா

ஆனால், ரம்யாவோ, குமாரசாமியுடன் ரகசிய வாழ்க்கை நடத்திவரும் நடிகை குட்டி ராதிகாவை குறிவைத்து இவ்வாறு பேட்டி கொடுத்துள்ளார். குட்டி ராதிகாவுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ள நிலையில் அதற்கு குமாரசாமிதான் தந்தை என்று அறிவித்திருந்தார். அதை குமாரசாமியும் மறுக்கவில்லை. குமாரசாமியின் பர்சனல் லைஃபை ரம்யா கிண்டிவிட்டுள்ளதால் மஜத வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+