ரன்பீர், தீபிகா, ராகுல் காந்தி!... மோஸ்ட் வாண்டட் பேச்சிலர்ஸ்...

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் மிகவும் விரும்பக்கூடிய பேச்சிலர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை தீபிகா படுகோனே, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பிரபல திருமண தகவல் மைய இணையதளம் ஒன்று இது தொடர்பாக சர்வே நடத்தியது. சினிமா, அரசியல், விளையாட்டு ஆகியவற்றில் பிரபலமான பேச்சிலர்கள் பற்றி இளைய தலைமுறையினரிடம் வாக்கு சேகரிக்கப்பட்டது.

அதேபோல் திருமணத்திற்குப் பின்னரும் அதிகம் ரொமான்ஸ் செய்யும் பிரபல தம்பதியர்கள் பற்றியும் இந்த மேட்ரிமோனியல் இணையதளம் சர்வே செய்துள்ளது.

24 வயதுமுதல் 30 வரை உடைய 7000 பேர் இந்த சர்வேயில் பங்கேற்றனர்.

இதில் பல சுவாரஸ்ய தகவல்கள் தெரியவந்துள்ளன.

ரன்பீர் கபூர் - சல்மான்கான்

ரன்பீர் கபூர் - சல்மான்கான்

ரன்பீர் கபூர் 31.4 சதவிகித வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.

இவருக்கு அடுத்தபடியாக சல்மான்கான் 25.6 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளார்.

ராகுல்காந்தி – விராட் ஹோக்லி

ராகுல்காந்தி – விராட் ஹோக்லி

அரசியலில் உள்ள ராகுல்காந்தி இளசுகளின் மனதில் மோஸ்ட் வாண்டட் தான். இவருக்கு 21.98 சதவிகிதம் பேர் வாக்களித்து 3 இடம் அளித்துள்ளனர். பிரபல கிரிக்கெட் வீரர் விராட் ஹோக்லி 21.2 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளார்.

தீபிகா படுகோனே – கத்ரீனா கைப்

தீபிகா படுகோனே – கத்ரீனா கைப்

பெண்களில் பிரபலமானவராக தீபிகா படுகேனோ முதலிடத்தில் உள்ளார். இவருக்கு 32.02 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. இவருக்குப் பின்னர் கத்ரீனா கைப் இரண்டாம் இடத்திலும், அனுஷ்கா ஷர்மா மூன்றாம் இடத்திலும் பிரியங்கா சோப்ரா நான்காம் இடத்திலும் உள்ளனர்.

அபிஷேக் – ஐஸ்வர்யா

அபிஷேக் – ஐஸ்வர்யா

திருமணமானவர்களில் பிரபலமானவர்களாக அபிஷேக் - ஐஸ்வர்யா தம்பதியர் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு 31.4 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். இவர்களுக்கு பின்னர் இரண்டாம் இடத்தில் ஹிருத்திக் ரோஷன் தம்பதியும், மூன்றாம் இடத்தில் ஷாருக்கான் தம்பதியும் உள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர்-அஞ்சலி

சச்சின் டெண்டுல்கர்-அஞ்சலி

கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் - அஞ்சலி தம்பதியருக்கு 23.31 சதவிகித வாக்குகள் கிடைத்து நான்காம் இடம் அளித்துள்ளனர். இந்த பட்டியலில் அமிதாப் - ஜெயா பச்சன் தம்பதிக்கு 20.18 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+