உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் ரஞ்சன் கோகாய்!
ரஞ்சன் கோகாய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார்
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட உள்ளார். இதற்கான பரிந்துரையை தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அமைச்சகத்திடம் முறைப்படி அளித்துள்ளார்.
தற்போது, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவிவகித்து வரும் தீபக் மிஸ்ரா அடுத்த மாதம் 2-ம் தேதி ஓய்வுபெற போகிறார்.

மத்திய அமைச்சரவை கடிதம்
புதிய தலைமை நீதிபதி பதவிக்கு தகுதியானவர்களின் பெயரைப் பரிந்துரை செய்யுங்கள் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தலைமை நீதிபதி தீபக்மிஸ்ராவை கடிதம் மூலம் கேட்டுக்கொண்டார்.

ரஞ்சன் கோகாய்
இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை தீபக் மிஷ்ரா மத்திய அமைச்சகத்திடம் பரிந்துரை செய்துள்ளார். எனவே உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.

புதிய தலைமை நீதிபதி
இதற்கான விழா அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும் என தெரிகிறது. ரஞ்சன் கோகாய், அசாமை சேர்ந்தவர். 2011-ம் ஆண்டு பஞ்சாப், ஹரியானா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து, 2012-ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். புதிதாக தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்கும் இவர், 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பதவியில் இருப்பார்.

4 பேரில் ஒருவர்
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக 4 நீதிபதிகள் போர்க்கொடி உயர்த்தியது தெரிந்த விவகாரமே. அந்த 4 பேரில் ஒருவர்தான் ரஞ்சன் கோகாய் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications