வெட்கக்கேடு: ஆண், பெண் சமத்துவத்தில் இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான், வங்கதேசம்
சென்னை: அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியாவில் ஆண், பெண் சமத்துவம் மோசமாக இருப்பது ஐ.நா. அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மனித மேம்பாட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பல நாடுகளின் தரவரிசைப் பட்டியல் உள்ளது. அதில் ஒரு முக்கியமான பிரிவு ஆண், பெண் சமத்துவம்.
ஆண், பெண் சமத்துவம் உள்ள நாடுகள் பட்டியலில் 155 நாடுகளின் பெயர்கள் உள்ளன.

இந்தியா
ஆண், பெண் சமத்துவம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 130வது இடம் தான் கிடைத்துள்ளது. அதே பட்டியலில் பாகிஸ்தானுக்கு 121வது இடமும், வங்கதேசத்திற்கு 111வது இடமும் கிடைத்துள்ளது.

மோசம்
தெற்காசிய நாடுகளை பொறுத்த வரை ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் ஆண், பெண் சமத்துவம் நன்றாக உள்ளது. அவ்வளவு தான்.

நாடாளுமன்றம்
இந்திய நாடாளுமன்றத்தில் 12 சதவீத பெண்கள் உள்ளனர். ஆனால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலோ 19.7 சதவீத பதவிகளில் பெண்கள் உள்ளனர். ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச நாடாளுமன்றங்களில் 27.6 சதவீத பெண்களும், 20 சதவீத பெண்களும் உள்ளனர்.

மகப்பேறு இறப்பு விகிதம்
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் 170 ஆக உள்ளது. ஆனால் இந்தியாவில் அது 190 ஆக உள்ளது. அதாவது இந்தியாவில் 1 லட்சம் பிரசவத்தில் 190 பிரசவத்தில் பெண்கள் பலியாகின்றனர்.

இந்திய பெண்கள்
இந்தியாவில் கல்வி, வேலை என்று பல விஷயங்களில் ஆண்களை விட பெண்கள் பின்தங்கியுள்ளனர். ஆண்களை விட பெண்கள் அதிக ஆண்டுகள் வாழ்வது மட்டும் தான் ஆறுதலான விஷயம்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications