ஒடிஷாவில் தான் பலாத்காரம் செய்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்ட குற்றவாளி
புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலத்தில் பாலியல் பலாத்கார குற்றவாளி தான் சீரழித்த 22 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்தவர் திலிப் பெஹ்ரா(32). கார் டிரைவர். அவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி பேருந்துக்காக காத்திருந்த 22 வயது பெண் ஒருவரை கடத்தி ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு கொண்டு சென்று அங்கு வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெஹ்ராவை கைது செய்தனர். அதில் இருந்து அவர் நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்நிலையில் பெஹ்ராவும், பாதிக்கப்பட்ட பெண்ணும் திருமணம் செய்துகொள்ள அனுமதி கோரி மாவட்ட நீதிமன்றத்தில் கூட்டாக மனு அளித்தனர். இது குறித்து நீதிமன்றம் இருவரின் கருத்துகளையும் கேட்டறிந்தது. அதன் பிறகு பெஹ்ராவின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு நீதிமன்றம் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி சிறை அதிகாரிகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். புதன்கிழமை பெஹ்ரா இந்து முறைப்படி தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
பெஹ்ராவை விடுதலை செய்யக் கோரி அந்த பெண் விரைவில் நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications