உ.பி சந்தைகளில் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பாலியல் பலாத்கார வீடியோக்கள்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் தினந்தோறும் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான பாலியல் பலாத்கார வீடியோக்கள் தினமும் நகர்புற சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து நடைப்பெற்று வரும் பாலியல் பலாத்காரத்தின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில், பாலியல் பலாத்காரம் வீடியோக்கள் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது

Rape videos selling in Uttar Pradesh priced from Rs. 50 to 150

செக்ஸ் வீடியோவை அதற்கான இணையதளங்களில் பார்த்தது பழைய காலமாகிவிட்டது. தற்போது ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து விற்கும் கொடுமை உத்தரபிரதேசத்தில் நடந்து வருகிறது.

ஒரு பெண்ணை கரும்பு தோட்டத்தில் சிலர் சூழ்ந்து கொண்டு பலாத்காரம் செய்வது போன்றும், தன்னை காப்பாற்றும்படி கத்தி ஆர்பாட்டம் செய்கிறாள் அந்த பெண். இந்த வீடியோ 30 வினாடிகள் மற்றும் 5 நிமிடங்கள் ஓடும் வீடியோக்களாக அப்பகுதி சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இவற்றின் விலை ரூ. 50 முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற வீடியோக்களை விற்பனை செய்வது தொழிலாகவே வைத்துள்ளனர்.

தனிநபர்கள் அல்லது கும்பல்கள் வழக்கமாக இந்த வீடியோக்களை பேஸ்புக்கில் இருந்து டவுன் லோடு செய்து விற்பனை செய்கின்றன.எனினும் சில நேரங்களில் அடையாளம் தெரியாதோர் ஈடுபடும் பாலியல் பலாத்காரம், மற்றும் தாக்குதல்கள் தொடர்பான வீடியோக்களை ஆன் லைனில் பதிவிடுகிறார்கள். ஜெண்டுகள் இதனை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மொபைல் போன்கள் அல்லது பென் டிரைவ் போன்றவைகளில் டவுன் லோடு செய்து கொடுக்கிறார்கள்.

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் இதனை தங்கள் செல்போனில் பதிவுசெய்து அதனை பாதிக்கபட்ட பெண்களிடம் காட்டி மிரட்டி மீண்டும் மீண்டும் குற்றசெயலகளில் ஈடுபடுகிறார்கள் அல்லது பணம் பறிக்கிறார்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

ஆக்ராவில் இத்தகைய வீடியோக்கள் பெலன்கஞ்ச்,பால்கேஸ்வர்,கம்லா நகர் ஆகிய பகுதிகளில் கிடைக்கின்றன.இதே போல மீரட், பேரலி பகுதியிலும் உள்ளன. இதுகுறித்து கடைத்தெருவில் உள்ள ஒருவர், "முன்னர் செக்ஸ் வீடியோ சில இணையதளங்களில் சென்று இளைஞர்கள் பார்ப்பது வழக்கம். ஆனால் தற்போது நேரடியாக பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ எடுத்து அதை சிலர் விற்பனை செய்கின்றனர் என்று கூறியுள்ளனர்.

புதிய, ஹாட்டான வீடியோக்களின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இங்கு விற்பனை செய்யப்படும் வீடியோக்களில், பல பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது மிகவும் அவமானகரமான செயலாக நினைக்கின்றனர். இருப்பினும் தங்களை வீடியோ எடுக்க வேண்டாம் என கெஞ்சும் பல வீடியோக்களும் வெளியாகியுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+