பலாத்காரம்: இன்போசிஸ் புனே வளாகத்தில் நடந்தது என்ன?
புனே: புனேவில் உள்ள இன்போசிஸ் நிறுவன வளாகத்தில் இருக்கும் கேன்டீனில் பணிபுரியும் இளம்பெண்ணை ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் பலாத்காரம் செய்ய அதை மற்றொருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள இன்போசிஸ் நிறுவன வளாகத்தில் இருக்கும் கேன்டீனில் கேஷியராக இருக்கும் திருமணமான 25 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பணி முடிந்த பிறகு துணி மாற்ற கழிவறைக்கு சென்றுள்ளார்.

அப்போது ஒப்பந்த தொழிலாளர்களான பரிதோஷ் பாக்(21), பிரகாஷ் மகதிக்(30) ஆகியோர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். கழிவறையில் வைத்து பாக் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பிரகாஷ் அந்த செயலை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இது குறித்து யாரிடமாவது கூறினால் வீடியோவை வெளியிட்டுவிடுவோம் என்று அவர்கள் அந்த பெண்ணை மிரட்டியுள்ளனர். அதனால் முதலில் பயந்த அந்த பெண் பிறகு செவ்வாய்க்கிழமை போலீசில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாக், பிரகாஷ் ஆகியோரை கைது செய்து அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக இன்போசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications