12 வயதில் கடத்தல்... 400 முறை பலாத்காரம்... டெல்லி இளம் பெண்ணின் சோகம்
டெல்லி: 12 வயதில் இருந்து சிகரெட் சூடு... பலமுறை பலரால் பலாத்காரம் என சித்ரவதைக்கு ஆளான இளம்பெண் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
10 ஆண்டுகளாக 400க்கும் மேற்பட்டவர்களால் பலாத்காரத்திற்கு ஆளான அந்த இளம்பெண்ணின் கதை கேட்பவர்களின் இதயங்களில் ரத்தத்தை வரவழைக்கிறது.
கொடுமையில் இருந்து தப்பி வந்த அந்த பெண்ணின் தாய், கடந்த செப்டம்பர் 9, 2006ம் ஆண்டு காவல்நிலையத்தில் தனது 12 வயது மகள், தங்கை வீட்டுக்கு செல்லும் போது, அவர் கடத்தப்பட்டார் என போலீசில் புகார் அளித்தார். அந்த மகள் 10 வருடங்களுக்கு பிறகு, 22 வயது பெண்ணாக பல்வேறு நபர்களால் சித்ரவதை அனுபவித்த திரும்பி வந்துள்ளார்.

கூட்டு பலாத்காரம்
பலமுறை குழுவாக சேர்ந்து பாலியல் பலாத்காரம், பல விபச்சார புரோக்கர்களால் விற்பனை செய்யப்படுதல், காமுகன்களால் சிகரெட்டால் சூடுபடுதல் என தனது வாழ்க்கையை பதாளத்தில் தொலைத்துள்ளார் ஒரு பெண்.

கொடூரர்களின் சித்ரவதை
அந்த கொடூரர்களிடமிருந்து 10வருடங்களுக்கு பின் தப்பித்து தனது வீட்டை தற்போது அடைந்துள்ளார். பத்தாண்டுகளாக தான் அனுபவித்த கொடுமைகளை கூறியுள்ளார் அந்த பெண்.

விபச்சார கும்பல்
எனது சித்தி வீட்டிற்கு செல்லும் போது சிலர் என்னை மயக்கமருந்து தடவிய கைக்குட்டையால் என் முகத்தை அழுத்தியதால் மயக்கமடைந்தேன். அதன் பின் ஒரு விபச்சார கும்பலால் யாரோ சிலருக்கு விற்கப்பட்டேன்.

சிகரெட் சூடு
மேற்கு வங்கம், பஞ்சாப், குஜராத், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு விற்கப்பட்டு சித்ரவதை அனுபவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சில காமூகர்கள் என்னை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, சிகரெட்டால் சூடும் வைத்துள்ளனர். எனது உடல் தீ காயங்கள் மட்டுமில்லாமல் மனதும் காயமடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

400 பேர் பலாத்காரம்
கடத்தப்பட்ட நாளிலிருந்து இதுவரை 400க்கும் மேற்பட்டோரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளேன் என்றும் அந்த பெண் கூறியுள்ளார். அந்த பெண் கொடுத்த தகவலின்படி தற்போது, 61 மற்றும் 70 வயதான இரண்டு முதியோர் உடபட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளது போலீஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications