• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோர்ட்டுக்கு வெளியே பேசித் தீர்க்கலாம்: ரஜினி ஹீரோயினிடம் தெரிவித்த கணவர்

By Siva
|

மும்பை: பிரபல நடிகை ரதியின் கணவர் அனில் விர்வானி தங்களுக்குள் உள்ள பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள விரும்புகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன் உள்ளிட்டோருடன் நடித்தவர் ரதி அக்னிஹோத்ரி. பாலிவுட் பக்கம் சென்றவர் தொழில் அதிபர் அனில் விர்வானியை திருமணம் செய்து மும்பையில் செட்டில் ஆனார்.

ரதியின் மகன் தனுஜ் விர்வானி இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

புகார்

புகார்

கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி ரதி மும்பை போலீஸ் கமிஷனரிடம் தனது கணவர் அனில் மீது புகார் அளித்தார். அனில் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்துவதாக தெரிவித்த ரதி தனது உடலில் இருந்த காயங்களையும் காண்பித்தார்.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

ஏப்ரல் 29ம் தேதி ரதி மீண்டும் தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்தார். அனில் தன்னை கத்தியைக் காட்டி மிரட்டியதாக ரதி தெரிவித்தார். இதையடுத்து அனில் முன்ஜாமீன் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அனிலை கைது செய்ய இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் அவரின் மனு குறித்த விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.

நீதிமன்றம்

நீதிமன்றம்

ரதி தன் மீது அளித்துள்ள புகார் குறித்து நீதிமன்றத்திற்கு வெளியே பேசி சுமூகத் தீர்வு காண விரும்புவதாக அனில் விர்வானி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ரதி

ரதி

அனில் தன்னை பல ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அவர் இன்று திருந்திவிடுவார், நாளை திருந்திவிடுவார் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வந்ததாகவும் ரதி முன்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Anil Virwani, the estranged husband of yesteryear Bollywood actor Rati Agnihotri, today told a court here that he wanted to opt for an out-of-court settlement of the domestic violence case filed against him by his wife.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more