கம்பேக்னா இப்படி இருக்கனும்.. ஆஸி.யின் இதயத்தை நொறுக்கிய ஜடேஜா.. ராக் ஸ்டாரின் தரமான செய்கை!
ஆஸி. அணியின் முக்கிய வீரர்களை அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தி வருகிறார் ஜடேஜா.
நாக்பூர்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டிராபி இன்று தொடங்கியுள்ளது. நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலியா தொடக்க வீரர்களை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களே வீழ்த்தி வீட்டுக்கு அனுப்ப, முக்கிய வீரர்களான் லபுஷேன் - ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சரியான போட்டியை கொடுத்தது.
2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்த ஆஸ்திரேலியா அணியை, உணவு இடைவேளையின் போது 76 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற நிலைக்கு லபுஷேன் - ஸ்டீவ் ஸ்மித் கூட்டம் எடுத்து சென்றது. ஆனால் உணவு இடைவேளைக்கு பின் லபுஷேன் 49 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்களிலும், ரென்ஷா ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஜடேஜா ஓவரில் ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலியா பேச்சு
ஜடேஜாவின் ஸ்பின்னை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் ஒட்டுமொத்தமாக திணறினர். "வண்டியெல்லாம் வச்சு கடத்திருக்கிறோம்" என்று சொல்வதற்கு ஏற்ப தொடர் தொடங்குவதற்கு முன் ஆஸ்திரேலியா கொடுத்த பில்டப்-களுக்கு இந்திய அணி களத்தில் பதில் கொடுத்து வருகிறது.

ரசிகர்களின் விமர்சனம்
ஆஸ்திரேலிய அணி பக்கம் திரும்பிய டெஸ்ட் போட்டியை, ஒரே ஆளாக ஜடேஜா இந்திய அணி பக்கம் திருப்பியுள்ளார். டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாகவே காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகிய ஜடேஜா, நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்தார். இதற்கிடையே மனைவியின் அரசியலுக்கு உதவியாக தேர்தல் பிரச்சாரம் செல்ல, ஒட்டுமொத்தமாக இந்திய ரசிகர்கள் கோபம் ஜடேஜா பக்கம் திரும்பியது.

ஜடேஜா பதிலடி
ஏனென்றால் மனைவியின் அரசியலை விடவும் இந்திய அணி முக்கியம் என்று ஜடேஜாவை ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நேரடியாக களமிறங்குவதால் (சர்வதேச போட்டி), ஜடேஜாவின் ஃபார்ம் பற்றிய கேள்விகளும் எழுந்தது. அதற்கு பதில் கொடுப்பது போல், ஆஸ்திரேலிய முக்கிய பேட்ஸ்மேன்களை வீழ்த்தி இதயத்தை நொறுக்கியுள்ளார்.

ஜடேஜாவின் ஸ்பின்
அஸ்வின் மற்றும் அக்சர் படேல் பற்றி அதிகம் பேசிய ஆஸ்திரேலியா வீரர்களும் மீடியாவும், ஜடேஜாவின் திறமை மதிப்பிட தவறி வந்தனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு "தான் ஒருவன் இருக்கிறேன்.. ஒரு காலத்தில் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவன்" என்று ஜடேஜா நினைவுபடுத்தியுள்ளார். இன்னும் சொல்லப் போனால் ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் பந்தை மட்டுமே வீசும் ஜடேஜா, ஸ்பின் ஒரு கவிதையை எழுதி வருகிறார். அஸ்வின் மற்றும் அக்சர் படேல் பற்றி அதிகம் பேசிய ஆஸ்திரேலியா வீரர்களும் மீடியாவும், ஜடேஜாவின் திறமை மதிப்பிட தவறி வந்தனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு "தான் ஒருவன் ஒருக்கிறேன்.. ஒரு காலத்தில் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவன்" என்று ஜடேஜா நினைவுபடுத்தியுள்ளார். இன்னும் சொல்லப் போனால் ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் பந்தை மட்டுமே வீசும் ஜடேஜா, ஸ்பின் ஒரு கவிதையை எழுதி வருகிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications