Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவில் என் மனைவி போட்டி.. ஓட்டு போடுங்க! குஜராத் தேர்தல் டி20 மாதிரி -இந்திய வீரர் ஜடேஜா வீடியோ

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக சட்டசபைத் தேர்தலை சந்திக்க இருக்கும் குஜராத் மாநில தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் தனது மனைவிக்கு ஆதரவு வழங்குமாறு இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா வீடியோ வெளியிட்டு உள்ளார்.

வரும் டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.

2 கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

வேட்பாளர் பட்டியல்

வேட்பாளர் பட்டியல்

182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் 167 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை கொண்ட பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டு உள்ளது. இதில் அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் கட்லோதியா தொகுதியிலும், உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்க்வி மஜுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

ஜடேஜா மனைவி

ஜடேஜா மனைவி

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ. தர்மேந்திரசிங் ஜடேஜாவுக்கு சீட் வழங்காமல் அவருக்கு மாற்றாத ரிவாபாவை அக்கட்சி தேர்வு செய்து உள்ளது.

ஜடேஜா வேண்டுகோள்

ஜடேஜா வேண்டுகோள்

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தனது மனைவிக்கு ஜாம்நகர் வடக்கு தொகுதி மக்கள் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "குஜராத் தேர்தல் டி20 கிரிக்கெட் போட்டியை போன்றது. ஜாம்நகர் மக்களும், அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் அதிகளவில் எனது மனைவிக்காக வாக்களிக்க வேண்டும்." என கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

மோடி, அமித்ஷாவுக்கு நன்றி

மோடி, அமித்ஷாவுக்கு நன்றி

கடந்த 10 ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு தனது மனைவிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த ஜடேஜா, "எனது மனைவிக்கு வாழ்த்துக்கள். உங்கள் கடின உழைப்பை நினைத்து மகிழ்கிறேன். சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடுங்கள். இவர் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷாவுக்கு நன்றி." என்று குறிப்பிட்டார்.

யார் இந்த ரிவாபா?

யார் இந்த ரிவாபா?

32 வயதான ரிவாபா ஜடேஜா கடந்த 2016 ஆம் ஆண்டு ஜடேஜாவை திருமணம் செய்துகொண்டார். மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்து இருக்கும் இவர், காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஹரிசிங் சோலன்கியின் உறவினர். 2019 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த இவருக்கு சவுராஷ்டிரா பகுதியில் அதிக ஆதரவு கிடைக்கும் என்பது பாஜக தலைமையின் நம்பிக்கை.

புதுமுகங்கள்

புதுமுகங்கள்

கடந்த 9 ஆம் தேதி 160 வேட்பாளர்களை கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக, சனிக்கிழமை 7 வேட்பாளர்களை கொண்ட 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 69 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. 38 எம்.எல்.ஏக்களுக்கு பதிலாக புது முகங்களுக்கு நிறுத்தப்பட்டு உள்ளார்கள்.

கட்சி தாவியவர்கள்

கட்சி தாவியவர்கள்

முதல்கட்டமாக பாஜகவில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட 69 எம்.எல்.ஏக்களில் 17 எம்.எல்.ஏக்கள் கடந்த 10 ஆண்டுகளில் வேறு கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்த அக்கட்சி எம்.எல்.ஏ பாகாபாய் பரத் பாஜகவில் இணைந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+