பாஜகவில் இணைந்தார் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா
காந்தி நகர்: இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இவர் கடந்த 2016-ம் ஆண்டு ரிவாபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நித்யானா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

கடந்த ஆண்டு இவரது காரில் மோதிய போலீஸ்காரர் ஒருவரை அடித்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. காா்னி சேனா என்ற அமைப்பின் மகளிரணி தலைவியாக ரிவாபா நியமிக்கப்பட்டதும், தம்பதி சகிதமாக சமீபத்தில் பிரதமா் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் ஜாம் நகா் பகுதியில் நேற்று பாஜக நிகழ்ச்சி நடைபெற்றது. குஜராத் விவசாயத்துறை அமைச்சர் பால்டு மற்றும் எம்பி பூணம் மாடம் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். அப்போது, இவர்களது முன்னிலையில் ரிவாபா பாஜகவில் தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டாா்.

இது சம்பந்தமாக ரிவாபா கூறும்போது, "பிரதமர் மோடிதான் எனக்கு மிகச்சிறந்த உந்துசக்தி. அதனால்தான் பாஜகவில் இணைந்தேன். என்னால் தனியாக எந்த மக்கள் சேவைகளையும் செய்ய முடியாது என்பதால், பாஜகவில் சேர்ந்துள்ளேன். என் முதல் இலக்கு பெண்களுக்கு அதிகாரம் பெற்று தர வேண்டும் என்பதுதான்" என்றார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications