அதெப்படி விஜயவாடாவை தலைநகராக அறிவிக்கலாம்? கொந்தளிக்கும் ராயலசீமா பொதுமக்கள்!!
ஹைதராபாத்: ஆந்திராவின் புதிய தலைநகர் விஜயவாடா அருகே அமைக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளதற்கு ராயலசீமாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆந்திராவின் தலைநகராக தங்கள் பகுதியில் உள்ள கர்னூலை அறிவிக்க வேண்டும் என்பது ராயலசீமா மக்களின் கோரிக்கை. இதற்காக கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் விஜயவாடா அருகேதான் தலைநகர் அமைக்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு சட்டசபையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அப்பகுதி மக்களை ஆவேசம் அடையச் செய்தது.
சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக அப்பகுதி மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தினார்கள். சந்திரபாபு நாயுடு கொடும்பாவியை எரித்தனர்.
கர்னூரில் நேற்றும் போராட்டம் நீடித்தது. சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் ராயலசீமா பகுதிகளில் பதற்றம் நீடித்து வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications