புழக்கத்திற்கு வருகிறதா புதிய 50 ரூபாய் நோட்டுகள்?...வைரல் போட்டோவால் பரபரப்பு
நாட்டில் புதிய 50 ரூபாய் நோட்டுகள் வெகு விரைவில் புழக்கத்துக்கு வரவுள்ளதாக போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
டெல்லி: ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டை போக்கும் விதமாக விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என ஆர்.பி.ஐ. ஏற்கெனவே தெரிவிதித்திருந்தது. இந்த நிலையில் கடல் நீல வண்ணத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள புதிய 50 ரூபாய் நோட்டுகள் போட்டோக்கள் இணைய உலகில் வைரலாகியுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி திடீர் அறிவித்தார். அதனையடுத்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வாங்கி அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என, ஆர்.பி.ஐ. தகவல் வெளியிட்டு இருந்தது. அதில்,ஆர்.பி.ஐ. கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்து இடம் பெற்றிருக்கும் என ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.
இந்த நிலையில், கடல் நீல நிறம்கொண்ட புதிய 50 ரூபாய் நோட்டுகளின் போட்டோக்கள் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் வைரலடித்து வருகிறது. மேலும், இந்தப் புதிய 50 ரூபாய் நோட்டுகள் வரும் 2018ம் ஆண்டு ஜனவரி முதல் புழக்கத்துக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள 50 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படாது என்றும், அவை புழக்கத்தில் உள்ளது போலவே , புதிய 50 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
உங்கள் வீட்டு லோன் இஎம்ஐ குறையுமா? ரிசர்வ் வங்கி முடிவு என்ன.. கீதா கோபிநாத் பேட்டி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
உங்களுக்கு அவசரப் பணத் தேவை இருந்தால் எங்களிடம் வாருங்கள்.. ஆர்பிஐ அவசர அழைப்பு.. யாருக்கு? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications