விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி தகவல்
புதிய 50 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது.
டெல்லி: ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டை போக்கும் விதமாக விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என ஆர்.பி.ஐ. தகவல் தெரிவித்து உள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

புதிய 2000 ரூபாய் நோட்டுகள் ஒரளவு பொதுமக்களுக்கு கிடைத்த போதும் சில்லரை தட்டுப்பாடு தீர்ந்த பாடில்லை. இதற்கிடையே ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், முன்பு 500, 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தவரையில் இப்போது புதிய நோட்டுகள் அச்சடிக்கப்படாது என்றும் மத்திய அரசு தெரிவித்து விட்டது.
இந்நிலையில் விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என ஆர்.பி.ஐ. தகவல் தெரிவித்து உள்ளது. புதிய ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்ணின் பின்னணியில் L என்ற எழுத்து மற்றும் ஆர்.பி.ஐ. கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்து இடம் பெற்றிருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications