ம.பி.யில் யாதவ ஜாதியைச் சேர்ந்தவர் முதல்வராக தேர்வு! பின்னணியில் பாஜக இப்படி ஒரு காய் நகர்த்தலா?
போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக யாரும் எதிர்பாராத விதமாக சீனியர் லீடர்களை ஓரம் கட்டிவிட்டு மோகன் யாதவை முதல்வராக தேர்வு செய்தது. யாதவ் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்கிய பாஜகவின் இந்த வியூகத்திற்கு பின்னால் இருக்கும் சில காரணங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றி பார்க்கலாம்.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அங்குள்ள 230 சட்டமன்ற தொகுதிகளில் 164 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. மத்திய பிரதேசத்தில் முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் பதவி வகித்து வந்தார். இதனால் மீண்டும் முதல்வர் பதவியை பெறும் முனைப்பில் தீவிரமாக சிவராஜ் சிங் சவுகான் இருந்தார்.

மோகன் யாதவ்: அதேபோல், சில சீனியர் தலைவர்களும் முதல்வர் பதவியை கைப்பற்ற தங்களுக்கு மேலிடத்தில் உள்ள நெருக்கம் மூலமாக லாபி செய்தனர். இதனால் கடந்த 3 ஆம் தேதியே சட்டமன்ற தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டாலும் முதல்வரை தேர்வு செய்வதில் கடும் இழுபறி பாஜகவுக்குள் நீடித்தது. ஒருவழியாக நேற்று நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மத்திய பிரதேசத்தில் முதல்வர் யார் என்று அறிவிக்கப்பட்டது.
யாரும் எதிர்பாராத விதமாக மோகன் யாதவ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மோகன் யாதவ் முதல்வராக அறிவிக்கப்படும் வரையில் பாஜகவினருக்கு கூட பலருக்கும் அவரை அறிந்து இருக்கவில்லை. உஜ்ஜைன் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். உஜ்ஜைன் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அவர், 12,941 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
யோகம் அடித்தது எப்படி?: கடந்த 2013ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற மோகன் யாதவ் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து 2018 மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றார். 2020-இல் கமல்நாத் அரசு கவிழ்ந்த பிறகு சிவராஜ் சிங் சவுகான் முதல்வராகப் பதவியேற்ற நிலையில், அப்போது மோகன் யாதவ் கேபினட் அமைச்சராகப் பதவியேற்றார். அவருக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அமைச்சராக இருந்த போதிலும் தற்போது முதல்வராக தேர்வு செய்யப்பட்டது பாஜகவினர் பலருக்கும் வியப்பை கொடுத்தது. சீனியர் லீடர்கள் பலரும் முதல்வர் பதவியை கைப்பற்ற பகீரதபிரயத்தனம் மேற்கொண்டு வந்த நிலையில் மோகன் யாதவிற்கு இந்த யோகம் அடித்தது எப்படி என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பார்ப்போம்.
ஒபிசி வகுப்பு: அதாவது, மத்திய பிரதேசத்தில் மோகன் யாதவை முதல்வராக தேர்வு செய்ததன் தாக்கம் உத்தர பிரதேசம் மற்றும் பீகார் வரையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்கிறார்கள். அது எப்படி என்றால், இரண்டு மாநிலங்களிலும் 120 லோக்சபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் கணிசமான அளவில் ஒபிசி வகுப்பான யாதவ சமூக மக்கள் வசித்து வருகிறார்கள்.
எனவே, மோகன் யாதவை முதல்வராக தேர்வு செய்ததன் மூலம் இந்த வாக்குகளை கணிசமான அளவில் பெற முடியும் என பாஜக நம்புகிறது. வரும் லோக்சபா தேர்தல் வெற்றிக்கு இந்த வாக்கு வங்கி கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் பாஜக மேலிடம் இந்த முடிவை எடுத்ததாக சொல்கிறார்கள். மத்திய பிரதேச முதல்வராக அறிவிக்கப்பட்டு இருக்கும் மோகன் யாதவின் மனைவி உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் என்பதும் இதில் கவனிக்க வேண்டியது ஆகும்.
இந்தியா கூட்டணிக்கு சவால்: கடந்த 2022 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி யாதவ் சமூக வாக்குகள் அதிகம் கொண்ட இடங்களில் எழுச்சி பெறும் என்ற கணிப்புகளை பாஜக பொய்யாக்கியது. தற்போது மத்திய பிரதேசத்தில் உத்தர பிரதேசத்துடன் தொடர்பு இருக்கும் மோகன் யாதவை முதல்வராக்கியதன் மூலம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றுவிட முடியும் என அக்கட்சி நம்புகிறது
பீகாரிலும் யாதவ் சமூகத்தை சேர்ந்த மக்கள் 1.86 கோடி பேர் உள்ளனர். இது அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் 14.26 சதவிகிதம் ஆகும். எனவே, பீகாரிலும் லாலுபிரசாத் யாதவை உள்ளடக்கிய இந்தியா கூட்டணிக்கு கடும் சவால் அளிக்கும் விதமாக பாஜகவின் இந்த தேர்வு அமைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications