வட தமிழ்நாட்டில் கன மழைக்கான ரெட் அலர்ட் - 10 முக்கியத் தகவல்கள்
வட தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கடற்பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
1. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரக் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
2. ஆரம்பத்தில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வலுப்பெறாது என கணிக்கப்பட்டது. ஆனால், இப்போது, இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
3. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இப்போது சென்னைக்கு தென்கிழக்கே 340 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டிருக்கிறது.
4. இதன் காரணமாக கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
5. சேலம், பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும்.
- "ஜெய்பீம் படத்தை முழுவதுமாக பார்க்க முடியவில்லை; மனம் வெறுத்துவிட்டது" - பார்வதி அம்மாள் பேட்டி
- ஜெய் பீம் திரைப்படத்துக்குப் பின்னால் நடந்த உண்மைக் கதை என்ன? நிஜ நாயகர்கள் யார்?
6. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிக அளவாக திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தாராபுரத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
7. தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்துவருவதால் 26 மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
8. வைகை அணியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 2,668 கன அடியிலிருந்து 4,420 கன அடியாக உயர்ந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் 141 அடியை எட்டியது நீர் மட்டம்.
9. மேட்டூர் அணை முழுமையாக நிரம்பியுள்ளது. அணைக்கு வரும் 45,000 கன அடி நீர் (விநாடிக்கு) அப்படியே திறந்துவிடப்படுகிறது.
10. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 17.11.2021 இரவு 10.00 மணிக்கு 104.01 அடியை எட்டியது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மூலம் அணைக்கு அதிகப்படியான நீர்வரத்து எதிர்பார்க்கப்படுவதால் அணையின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நீர்மட்டத்தை 104.00 அடியில் பராமரிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கு மேல் வரும் நீர் காலை 6.00 மணி முதல் திறந்துவிடப்படுகிறது.
பிற செய்திகள்:
- கிளாஸ்கோ மாநாட்டில் தீவு நாடுகளுக்கு துரோகம் செய்துவிட்டதா இந்தியா?
- நிஜ செங்கேணியை சந்திக்க வேண்டாம் என இயக்குநர் கூறியது ஏன்? - 'ஜெய் பீம்' மணிகண்டன் பேட்டி
- இலங்கையில் 'அரிசி, சீனிக்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்' - எதிர்க்கட்சியினர் போராட்டம்
- "நாலு நாளாச்சு, யாரும் வரலை" - குமரியில் தீவாக மாறிய கிராமத்தின் கள நிலவரம்
- குழந்தைகள் ஆபாச காணொளி பகிர்ந்ததாக தமிழகத்தில் 6 பேர் உள்பட 31 பேர் மீது சிபிஐ வழக்கு
- ஸ்ரீரங்கம் கோயிலில் மோதியின் உரை: திமுக, பாஜக மோதலின் உண்மை பின்னணி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!













Click it and Unblock the Notifications