மீண்டும் தலைதூக்கும் ”செம்மரக் கடத்தல்” - தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 9 பேர் கைது
திருப்பதி: திருப்பதி அருகே ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை கடத்தியதாக நெல்லையை சேர்ந்த 4 பேர் உள்பட மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி அருகே உள்ள ஜீவசோனா வனப்பகுதியில், செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதிக்குள் செம்மரக் கட்டைகளை வெட்டி அடுக்கி வைத்துக் கொண்டிருந்த கடத்தல் கும்பலை போலீசார் கண்டனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

ஆனால் போலீசாரின் பிடியில் கடத்தல் கும்பலை சேர்ந்த 9 பேர் மட்டுமே பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர். பிடிபட்டவர்களிடம் இருந்து 30 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
உயரக செம்மரக் கட்டைகள் என்பதால் இதனுடைய மதிப்பு ரூபாய் 50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் செம்மரங்களை வெட்டுவதற்கான கத்தி, கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பிடிபட்ட 9 பேரும் எம்.ஆர்.பல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில், பிடிபட்ட 9 பேரில் அமானுல்லா, சண்முகம், அரிகிருஷ்ணன், ரமேஷ் ஆகிய 4 பேரும் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மற்ற 5 பேரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிந்தது. கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications