திருப்பதி மலைப்பாதையில் வெடிபொருட்கள்... தாக்குதல் நடத்த தீவிரவாதிகளின் சதியா என போலீஸ் விசாரணை
திருப்பதி மலைப்பாதையில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி: திருப்பதி மலைப்பாதையில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை ஏற்படுத்த தீவிரவாதிகள் சதிதிட்டம் போட்டுள்ளனரா என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் பாதையாத்திரை வழியாகவும் சென்று வருகின்றனர். இதற்காக இரு வழிகள் உள்ளன. ஒன்று அலிபிரி மலைப்பாதை, மற்றொன்று ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை ஆகியவை ஆகும்.
இந்த வழிகளில் பக்தர்கள் நடைபயணமாக வந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.

அதிக போலீஸ்
உலகில் உள்ள பெரும்பாலானோர் வந்து செல்லும் கோயில் உள்ளதாலும் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாலும் இங்கு பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களும் பலகட்ட சோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுப்பப்படுகின்றனர். கோயிலை சுற்றி குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் விமானங்கள் பறக்கவும் இங்கு தடை செய்யப்பட்டுள்ளது.

கடத்தல் பணிகள் அமோகம்
திருப்பதியில் உள்ள வனப்பகுதியில் செம்மரக் கட்டைகள் கடத்தல் தொழில் மிகவும் அமோகமாக நடைபெறுகிறது. செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரும் இங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எலக்ட்ரானிக் பொருட்கள்
நேற்றிரவு திருப்பதியின் ஸ்ரீவாரி மெட்டு மலையடிவாரத்தில் ஒரு சில பகுதிகளில் செம்மரக்கட்டைகள் கடத்தல் தடுப்பு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு பை கிடந்தது. அதில் ஸ்ரீரங்கம் முகவரி கொடுக்கப்பட்டிருந்தது.

போலீஸார் அதிர்ச்சி
அந்த பையில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும், எலக்ட்ரானிக் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டது. இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதில் கேரள மாநிலத்தின் நகைக் கடைக்குச் சொந்தமான நகை பெட்டியும் இருந்தது. இதனால் கேரள மாநிலத்தவரின் கைவரியாக இருக்குமோ என்ற போலீஸார் சந்தேகிக்கின்றனர். இது தீவிரவாத செயலா அல்லது வேறு அசம்பாவிதம் செயலுக்கான ஏற்படா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மலைப்பாதையில் வேறு எங்கும் வெடிபொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா என்றும் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications