மோடியின் வேட்பு மனுவை நிராகரித்து எம்.எல்.ஏ. பதவியை பறிக்க வேண்டும்: காங். வலியுறுத்தல்
அகமதாபாத்: தமக்கு திருமணமான விவரத்தை மறைத்த நரேந்திர மோடியின் லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும். அவர் தற்போது வகித்து எம்.எல்.ஏ. பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்த மோடி தமக்கு திருமணமாகிவிட்டது என்பதை முதல் முறையாக ஒப்புக் கொண்டு தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அகமதாபாத்தில் நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா கூறியதாவது:
2002, 2007, 2012 ஆகிய சட்டசபை தேர்தல்களில் மோடி தமது திருமணம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. தற்போதுதான் தமக்கு திருமணம் ஆன உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். அப்படியானால் அவர் தவறான தகவலை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்ததை அவரே ஒப்புக் கொள்கிறார்.
இதனால் லோக்சபா தேர்தலுக்கான மோடியின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும். அத்துடன் 2012ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் உண்மை தகவலை மறைத்ததற்காக தற்போது வகித்து வரும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்தும் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் மோடியின் இந்த மோசடி நடவடிக்கைக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சசிதரூரின் மனைவி மறைந்த சுனந்தா பற்றி கூறும் போது ரூ50 கோடி கேர்ள் பிரண்ட் என்றார் மோடி. இளம்பெண்ணை வேவு பார்க்கத் தெரிந்தது மோடிக்கு.. ஆனால் சொந்த மனைவியின் வருமானம் தெரியவில்லை என்கிறாரே.. பொதுமக்கள் மத்தியில் பிரம்மச்சாரி என்ற இமேஜை உருவாக்கி நாடகமாடியிருக்கிறார் மோடி.
இவ்வாறு அர்ஜூன் மோத்வாடியா கூறினார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications