ரியைலன்ஸ் டிடிஹெச் அதிரடி.. 500 சேனல்கள் 5 வருடங்களுக்கு இலவசம்! ஹெச்.டி. சேனல்கள் ஓராண்டுக்கு ஃப்ரீ
Recommended Video

மும்பை: அனில் அம்பானியின், ரிலையன்ஸ் பிக் டிவி புது ஆஃபர்களை வெளியிட்டு பிற டிடிஎச் சேவை நிறுவனங்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
சகோதரர் முகேஷ் அம்பானியின் ஜியோ, செல்போன் சேவை துறையில், அதிரடி சலுகைகள் மூலம் பெரும் அளவிற்கு வாடிக்கையாளர்களை ஈர்த்ததை போல டிடிஎச் சேவையில் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது அனில் அம்பானியின் 'பிக் டிவி'.
இதற்காக ஜியோவை போலவே, இலவசம் என்ற கவர்ச்சி அறிவிப்பை கையில் எடுத்துள்ளது பிக் டிவி.

முன்பதிவு இப்படித்தான்
ரிலையன்ஸ் பிக் டிவியின் இயக்குநர், விஜேந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுபற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி டிடிஎச் சேவையை புக் செய்ய பிக் டிவியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான www.reliancedigitaltv.com ல், ரூ.499 செலுத்த வேண்டும். டிடிஎச் வீட்டில் பொருத்தப்படும்போது எஞ்சிய ரூ.1500 தொகையை செலுத்த வேண்டும். டிஷ் ஆன்டனாவை பொருத்துவதற்கு ரூ.250 கொடுக்க வேண்டும்.

திரும்ப கிடைக்குமாம்
அதேநேரம், இந்த 2000 ரூபாய், வாடிக்கையாளர்களுக்கே 3 வருடங்களுக்கு பிறகு ரீசார்ஜ் தொகை என்ற வகையில் திரும்ப கிடைக்கும். இப்படி இந்த தொகை திரும்ப கிடைக்க வேண்டுமானால், 2வது வருடத்தில் இருந்து தொடர்ந்து 2 வருடங்களுக்கு, மாதம் ரூ.300 ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

இலவசம்
இந்த திட்டத்தில் 5 வருடங்களுக்கு 500 சேனல்கள் ஃப்ரீயாக கிடைக்கும், கட்டண மற்றும் எச்டி சேனல்களையும் ஓராண்டு இலவசமாக பார்த்துக்கொள்ள முடியும்.
பிக் டிவி வழங்கும் செட்ஆப் பாக்சில், ரெக்கார்டிங், யூடியூப் மற்றும் யூஎஸ்பி வசதிகளும் இணைந்திருக்கும் என்பது சிறப்பு.

போட்டி ஆரம்பம்
பிக் டிவி டிடிஎச்சுக்கான முன்பதிவு இன்று காலை 10 மணி முதல் துவங்கியுள்ளது. இதனால் பிற டிடிஎச் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தில் சலுகை காட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்கிறார்கள் மார்க்கெட் பார்வையாளர்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications